search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை பெரிய காலாப்பட்டு சுப்பையா நகரை சேர்ந்தவர் சிவகுமார்.
    • விலை உயர்ந்த பைக்கை அடித்து உடைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பெரிய காலாப்பட்டு சுப்பையா நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ஹேமாதேவி. இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே ஆனந்தன் என்பவர் வீடு கட்டி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே இருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆனந்தனுக்கும் ஹேமாதேவிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆனந்தன் இரும்பு கம்பியால் ஹேமாதேவி வீட்டின் அருகே நின்ற கார் மற்றும் விலை உயர்ந்த பைக்கை அடித்து உடைத்தார்.

    இதுகுறித்து ஹேமாதேவி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • லஞ்ச ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • அரசு துறை இடையில் தரகர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் லஞ்ச ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராமு, ஆகியோர் லஞ்ச ஒழிப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் தியாகராஜன், பொதுமக்கள், அரசு துறை இடையில் தரகர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

    முறையான நபர்களுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்க வேண்டும். அலுவலகத்தில் சி.சி.டி.வி. பொருத்த வேண்டும். ஆன்லைன் சேவையை சரியாக செயல்படுத்த வேண்டும்.

    லஞ்சம் வாங்கினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் தொகுதி ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இதனை ஜெ.பேரவை மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஜெ.பேரவை செயலாளர் சுத்து கேணி பாஸ்கரன், இணை செயலாளர் வீரம்மாள், கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணை செயலாளர்கள் ஜெய சேரன், எம்.ஏ.கே. கருணாநிதி, நாகமணி, மகளிர் அணி விமலா ஸ்ரீ, தொழிற்சங்க செயலாளர் பாப்பு சாமி, துணைத் தலைவர் ராஜாராமன் , எம்.ஜி.ஆ.ர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், சுந்தரமூர்த்தி, மோகன்தாஸ், கணபதி, அரியாங்குப்பம் தொகுதி ஜீவா, மற்றும் தொகுதி செயலாளர்கள் ஏம்பலம் சம்பத், பாகூர் நடேசன், மணவெளி தொகுதி பாஸ்கரன், காமராஜர் நகர் தொகுதி கமல் தாஸ், நெல்லித்தோப்பு தொகுதி டாக்டர் கணேஷ் மற்றும் சிவாலய இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தலைமை செயலகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடைபெற்றது.
    • உறுதிமொழிகள் குழு தலைவரான நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டப்பேரவை அரசாங்க உறுதி மொழிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடைபெற்றது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மேற்பார்வையில் உறுதிமொழிகள் குழு தலைவரான நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, ஸ்மார்ட் சிட்டி திட்டம், மற்றும் திட்ட அமலாக முகமை ஆகிய துறைகளில் முதல்-அமைச்சரும், துறை சார்ந்து அமைச்சர்களும் சட்ட சபையில் அறிவித்த நலத்திட்ட உறுதி மொழி களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பால் கென்னடி, வி.பி.ராமலிங்கம் ஏ.கே.டி.ஆறுமுகம், அசோக்பாபு, சிவசங்கரன், அரசு செயலர் மணிகண்டன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை இயக்குனர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் அளித்த உறுதிமொழி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் கிராமப் பகுதியில் இருந்து நகர்ப்புறங்களுக்கு சுத்தமான குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவது குறித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட், போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • சர்க்கரை மற்றும் பிரஷர் நோய்க்கும் அவர் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
    • வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை யென கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் கண் ஆபரேஷன் செய்துள்ளார். மேலும், சர்க்கரை மற்றும் பிரஷர் நோய்க்கும் அவர் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அடிக்கடி உடல் வலி இருப்பதாக, தனது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த அவர் அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு செல்வதாக கூறி சென்றார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை யென கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அதே ஊரைச்சேர்ந்த மதிவாணன் என்பவர், ராணி முந்திரி தோப்பில் தூக்கில் தொங்குவதாக கூறியதை அடுத்து, ராணியின் மகன், மாதவன் என்பவர், சம்பவ இடத்திற்கு சென்று, ராணி தூக்கில் தொங்குவதை உறுதி செய்து, கோட்டுச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • அர்ப்பணித்த தலைவரை இழந்து விட்டோம்

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல் நலக்குறைவால் கடந்த 5-ந் தேதி இரவு மரண மடைந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், ப.கண்ணன் மனைவி சாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    உங்கள் கணவர் ப.கண்ணன் மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வருந்தினேன். பொது மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தலைவரை இழந்து விட்டோம். புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவு கூறப்படும்.

    அவரை இழந்து வாடும் உங்கள் வேதனையையும், துயரத்தையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ப.கண்ணன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தில்பணியில் இருந்த 14 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 11 தொழிலாளர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 தொழிலாளர்களுக்கு ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலாப்பட்டை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு களை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை கவர்னர் அனுமதியுடன் அரசு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையில் சட்டங்கள், விதிகள், குத்தகை, உரிம நிபந்தனைகள் மற்றும் பிற நிபந்தனைகளை மீறுவதைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து புதுவை மாவட்ட நீதிபதி 7 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட நீதிபதியுமான வல்லவன் விசாரணையை தொடங்கி உள்ளார்.

    விபத்தில் காயமடந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 தொழிலாளர்களும் தீக்காயங்களுடன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    • கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    • விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை ஈஸ்வரன் கோவில் தோப்புப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை கடந்த ஆகஸ்டு மாதம் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தற்போது இப்பணி நடைபெற்று வருகிறது. இதனை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் தற்போது மழைக்காலம் என்பதால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், அர்த்தனாரி, பிரபாகரன், மன்சூர், இருதயராஜ், ராகேஷ், பஸ்கல், ரகுமான், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
    • 2-ம் இடத்தை பல்கலைக்கழக அணி பெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பிம்ஸ் அணி வெற்றி பெற்றது.

    2-ம் இடத்தை பல்கலைக்கழக அணி பெற்றது. கூடைப்பந்து அணியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, உடற்கல்வி உதவி பேராசிரியர் மற்றும் நிர்வாகி டாக்டர் பிரசன்னா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரபாளை யத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இப்பணியை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கரியமானிக்கத்தில் உள்ள வேளாண் பண்ணையில் நடைபெற்றது.
    • தேனீ வளர்ப்பு முறை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் ன்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தேனீ.வளர்ப்பு பயிற்சி முகாம் நெட்டப்பாக்கம் தொகுதி கரியமானிக்கத்தில் உள்ள வேளாண் பண்ணையில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடா ஜலபதி ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்ற பயிற்சி முகாமில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர், ரேவதி, பூச்சியியல் துறை, உதவி பேராசிரியை இலக்கியா, தோட்டக்கலைத்துறை, மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை வழிநடத்தினர்.

    இம்முகாமின் சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில தேனீ வளர்ப்பு பண்ணை உரிமையாளர், சந்துரு கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு முறை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்.

    • தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம்.
    • இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நாகை மாவட்டம் திட்டச்சேரி வாணியத்தெருவை ச்சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சத்தியவாணி (வயது24) என்பவர், காரைக்கால் நேரு வீதியில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

    இவர் வழக்கமாக தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 4-ந் தேதி வழக்கம் போல், இருவரும் வேலைக்கு சென்றனர். அப்போது, அதே கடையில் வேலை செய்யும் ஓடுதுறையைச்சேர்ந்த சினேகா என்பவரையும் ஸ்கூட்டியில் ஏற்றிகொண்டு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மாலை 5 மணிக்கு, தந்தை சங்கர் சத்தியவாணிக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தொடர்ந்து, சங்கர் பல இடங்களில் தேடியும் சத்தியவாணி குறித்து தகவல் தெரியாததால், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

    ×