search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமெரிக்காவில் மனைவியை சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை
    X

    அமெரிக்காவில் மனைவியை சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை

    • கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்கா ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால், மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விசாரணையில் திருமணத்துக்கு முன் சவுமியா, கடலூரை சேர்ந்த உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சந்தித்து பேசி வந்ததும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன், சவுமியா ஆகியோர் கடைசியாக பேசிய ஆடியோ மற்றும் சவுமியா வேறொரு நபருடன் இணைந்து எடுத்த புகைப்பட மும் சமூக வலைதளத்தில் வெளியானது.

    அந்த ஆடியோவில் பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலனுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்சனை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல தோழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருவரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை கலெக்டர் குலோத்துங்கனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது மகன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் தங்களது பேர குழந்தைகளையும் அங்கேயே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுபோல் சவுமியாவின் தாயார் தங்களது மகள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    Next Story
    ×