என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மோசடி: புதுச்சேரி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் திருப்பதி போலீசார் விசாரணை
- டாக்டர் குடும்பத்தினர் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
- பத்மநாபன் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வி.ஐ.பி. டிக்கெட் பெற பரிந்துரை கடிதம் பெற்றது உறுதியானது.
புதுச்சேரி:
திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க புதுவை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வி.ஐ.பி. தரிசனத்திற்கு தனி கோட்டா உள்ளது.
இதற்கான பரிந்துரை கடிதம் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும். அந்த வகையில் பரிந்துரை கடிதத்தை புதுவை தாகூர் நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் பெற்றுள்ளார். அந்த கடிதத்தை வைத்து 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கியுள்ளார். இந்த 6 டிக்கெட்டையும் நெல்லூரை சேர்ந்த டாக்டர் குடும்பத்துக்கு ரூ.23 ஆயிரத்துக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தரிசனத்துக்கு அவர் முறையான ஏற்பாடு செய்யவில்லை. இதனால் டாக்டர் குடும்பத்தினர் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதுகுறித்து திருப்பதி காம்ப்ளக்ஸ் போலீசார் புதுச்சேரி தாகூர் நகரை சேர்ந்த பத்மநாபனை புதுச்சேரி முதல்-அமைச்சர் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது பத்மநாபன் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வி.ஐ.பி. டிக்கெட் பெற பரிந்துரை கடிதம் பெற்றது உறுதியானது.
இதே போல் அவர் அடிக்கடி புதுவையில் இருந்து முதல்-அமைச்சர் கடிதத்தை பெற்று கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பத்பநாபனை விசாரணைக்காக திருப்பதி அழைத்து சென்றனர்.