search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவம் அறிவோம்- சர்க்கரை நோயின் பாதிப்புகள்
    X

    மருத்துவம் அறிவோம்- சர்க்கரை நோயின் பாதிப்புகள்

    • ஒவ்வொரு பத்து வருடம் கடக்கும் போதும் நாம் புதிய உரு எடுக்கின்றோம். நம் ஆசைகள், தேவைகள் இவை மாறிக் கொண்டே இருக்கின்றன.
    • கனவுகளுக்கு அதிக பொருள் உண்டு என்கிறார் இந்த ஆய்வாளர். 70 சதவீத கனவுகள் ஏதோ ஒரு ரகசிய செய்தியினை கூறுகின்றன.

    ரத்தத்தில் உயர் அளவு சர்க்கரை: ரத்தத்தில் நீண்ட காலம் சர்க்கரை இருந்தால் கண் பார்வை வெகுவாய் பாதிக்கப்படுகின்றது. பல உறுப்புகளின் செயல் இழப்புகளும் நிகழ்கின்றன.

    * பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகின்றது.

    * சிறுநீரக பாதிப்பு ஏற்படும்போது பசியின்மை, வயிற்றுப் பிரட்டல், தூக்கமின்மை, கால், உடலில் வலி, உடல் அரிப்பு ஏற்படுகின்றது.

    * சர்க்கரை அதிக அளவு உடலில் இருந்தால் நரம்புகள், ரத்தக் குழாய்களை பாதித்து வலியினை ஏற்படுத்துகின்றது.

    * சர்க்கரை அளவை கட்டுப்படுத்தினாலே பல நோய்கள் நீங்கி விடும்.

    * இந்த நோய் வரும்போது கை, கால், விரல்களில் மதமதப்பு ஏற்படும். உடலில் முள் குத்துவது போன்று இருக்கும்.

    * சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக இருதய நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.

    * சுமார் 70 சதவீதம் வரை இருதய நோயால் இறப்பவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.

    * கட்டுப்படுத்தப்படாத நீண்ட கால சர்க்கரை நோயால் கண் வெகுவாய் பாதிக்கப்படுகின்றது.

    * நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு நபருக்கு சரும பாதிப்பு ஏற்படுகின்றது. கை, கால்களில் அதிக அரிப்பு, கிருமி பாதிப்பு ஏற்படுகின்றது.

    * சர்க்கரை, சர்க்கரை சார்ந்த பொருட்கள், மாவு, சத்து பொருட்கள் இவற்றினை தவிர்த்து விட்டாலே வேகம் குறையும். முறையான உடற்பயிற்சி, தேவையான அளவு தண்ணீர் அவசியம். கூடுதல் எடை இருந்தால் மருத்துவ ஆலோசனைபடி எடையினை குறைத்து விட வேண்டும்.

    * புகை, மது இவை இல்லாமல் இருந்தாலே உங்கள் ஆரோக்கியம் கூடும். விடாமல் வெகு நேரம் அமர்ந்தபடி இருக்கக் கூடாது. அவ்வப்போது அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடக்க வேண்டும்.

    * சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருங்கள். சுறுசுறுப்பான நடை 45 நிமிடம் இருக்க வேண்டும். காலையில் நடப்பது கூடுதல் பலன் தரும். 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். நடப்பது, உடற்பயிற்சி இரண்டும் அடுத்தடுத்து செய்ய வேண்டாம். சர்க்கரை அளவு ரத்தத்தில் வேகமாக குறையலாம். 20 நிமிடம் இரவு உணவுக்குப் பின்பு நிதானமாய் நடக்க வேண்டும். கிரீன் டீ இரு முறை கூட ஒரு நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மனோதத்துவ உண்மைகள் என்று ஒருவர் எழுதிய குறிப்பினை படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன்.

    * எதைப் பார்த்தாலும், யார் பேசினாலும் எரிச்சலாக இருக்கின்றதா? நீங்கள் யாரையோ இழந்து தவிக்கின்றீர்கள் எனலாம்.

    * வெட்கப்படுபவர்களா? இவர்கள் சற்று கூச்ச சுபாவம் உடையவர்கள். அநீதிக்கு வெட்கப்படுபவர்கள் என்று பொருள் கொள்ளலாம். இவர்கள் நம்பத்தகுந்தவர்களாக இருப்பார்கள்.

    * ஒவ்வொரு பத்து வருடம் கடக்கும் போதும் நாம் புதிய உரு எடுக்கின்றோம். நம் ஆசைகள், தேவைகள் இவை மாறிக் கொண்டே இருக்கின்றன.

    * கனவுகளுக்கு அதிக பொருள் உண்டு என்கிறார் இந்த ஆய்வாளர். 70 சதவீத கனவுகள் ஏதோ ஒரு ரகசிய செய்தியினை கூறுகின்றன.

    * நீங்கள் அவரை, அவளை இப்படி சொல்லும் போது உங்களுக்கு உங்கள் மனதில் யாரோ ஒருவர் ஞாபகத்துக்கு வருவார்.

    * எனக்கு கோபம், சோகம், தனிமை இப்படி எந்த உணர்ச்சிகளும் இல்லை என்று கொல்லும் சாதாரண மனிதன் தன்னைத் தானே மனதளவில் அழித்துக் கொள்கின்றான்.

    * ஒரு காலத்தில் மிக நெருங்கிய நண்பர் என்று தனது நண்பனை குறிப்பிடும் 90 சதவீத மக்கள் காலப் போக்கில் அவர்களுடன் நட்பில் கூட இருப்பதில்லை. * நாம் நம் குழந்தைகளிடம் எப்படி பேசுகின்றோமோ அதுவே அவர்களின் ஆழ்மன குரல் ஆகின்றது.

    * ஒருவரின் குணம் அவர் எதற்காக சிரிக்கின்றார் என்பதிலேயே புரிந்து விடும். (உம்) மற்றவரின் கஷ்டம், தரம் தாழ்ந்த ஜோக்குகள் போன்றவை ஆகும். * ஆழ் மன காயங்களை எளிதில் வார்த்தைகளில் சொல்ல முடியாது. * நாம் அழுவதன் காரணம் நம் வேதனையின் வலியினை வாயால் சொல்ல முடியாது.

    * சிலர் அதிகம் சிரிக்க, மகிழ்ச்சியாய் இருக்க அஞ்சுவார்கள். காரணம் அதனைத் தொடர்ந்து ஏதேனும் ஒரு சோகம் வந்து விடும் என்ற அச்சம் ஆகும். * அதிகம் பொய் பேசும் வாய்ப்புகள் உண்டு.

    * வேகம் வேகமாக உண்பவர்கள் அதிகம் எடை போட்டு விடுவார்கள்.

    * தவறான எண்ணங்கள், பழக்கங்கள் பின்னால் செல்லாது ஒருவர் இருந்தாலே சரியான, நன்மையான விளைவுகள் தானே ஏற்படுமாம்.

    * ஒரு நகைச்சுவைக்கு சிரிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. மூளையின் 5 பிரிவு பகுதிகள் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

    * சில நேரங்களில் ஏதோ சரியில்லை என்ற ஒருவித படபடப்பும் இருக்கும். அப்போது சுற்றி நிகழ்பவைகளை கூர்ந்து கவனியுங்கள்.

    * உங்கள் உடல் நலம் சரியில்லை என்றால் உடல்தான் அறிகுறிகள் காட்டி உங்களுடன் பேசும். உங்கள் உடலை நம்புங்கள். அந்த அறிகுறிகளுக்கு உடனே கவனம் கொடுக்க வேண்டும்.

    * சிலரைப் பார்த்தவுடன் எந்த காரணமும் இன்றி அவரை பிடித்து விடும். சிலரிடம் எந்த காரணமும் இன்றி அவரை தவிர்த்து விட வேண்டும் என்று தோன்றும். எந்த யோசனையும் இன்றி அமைதியாய் சிறிது நேரம் கண்கள் மூடி இருங்கள். பிரபஞ்சம் உங்களுக்கு சரியான பதிலினைக் கூறி விடும். இதையெல்லாம் எந்த செலவும் இல்லாமல் செய்து பலன் பெறலாமே.

    நாம் முழு தன்னம்பிக்கையுடன் இருக்க

    * தலை சற்று நிமிர்ந்து நிற்க வேண்டும். தோள்கள் முன்புறம் துவண்டு வரக்கூடாது. சற்று பின்னால்தான் இருக்க வேண்டும்.

    * வணக்கம் கூறும் போதும் அது முறையான வணக்கமாக ஒரு சில நொடிகள் இருக்க வேண்டும். ஒரு கை அல்லது இரு கையினை தொய்வாக வணக்கம் பாவனையாக இருக்கக் கூடாது. * ஒருவருக்கு கை கொடுத்தாலும் அதில் மிடுக்கோடு, உறுதியான பண்புடன் இருக்க வேண்டும்.

    * யாரையும் அவரது கண்களை பார்த்து பேசுங்கள். தலை குனிந்தோ, கண்களை அங்கு இங்கு அலைய விட்டோ பேசாதீர்கள்.

    * உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். விழுந்து மடிந்து சிரிப்பது, கோபப்படுவது, அழுவது, இவை கூடவே கூடாது.

    * சற்று நீளமான அடி வைத்து நடக்கப் பழகுங்கள். அதற்காக தாவி குதிக்கும் அளவு அல்ல. சின்ன அடிகளை விட சற்று நீளமான அடிகளை வைத்து நடப்பது கம்பீரத்தினை, தன்னம்பிக்கையினைக் கூட்டும்.

    * தினமும் 4 அல்லது 5 வால்நட் கொட்டையினை எடுத்துக் கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தம் குறையும். ஒமேகா 3 சத்து நிறைந்தது. ஆரோக்கியமான சூழலினைத் தரும். ஆனால் இந்த இடத்தில் இதனைக் குறிப்பிடுவதன் காரணம் 'ஸ்ட்ரெஸ்' அளவு வெகுவாய் குறையும். இதனால் மேற்கூறிய முறைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவதும் எளிதாய் இருக்கும். முயற்சி செய்வோமே!

    காலையில் உட்படுத்த வேண்டிய சில பழக்கங்கள்

    அன்றாடம் காலையில் செய்ய வேண்டிய சில பழக்கங்களை நாம் நம் வாழ்க்கையில் உட்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றினை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

    * காலையில் முதல் வேலையாக பல் தேய்த்தவுடன் ஓரிரு கிளாஸ் நீர் குடிக்க வேண்டும். ஏனெனில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் நாம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர் வற்றி இருக்கும்.

    * சுமார் 90 சதவீத மக்கள் காலையில் எழுந்தவுடன் செல்போனைத்தான் பார்க்கின்றார்கள். சில முக்கிய வேலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொழுது விடிந்தவுடன் செல்போன் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது விடியற்காலையிலேயே மன அமைதியினை கெடுத்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்குப் பதிலாக 10 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்யலாமே.

    * காலையில் நல்ல புத்தகம் படிக்கலாம். 10 முதல் 15 நிமிடங்களாவது ஏதேனும் படிக்கலாம்.

    * காலை உணவு நல்ல புரதம், நல்ல கொழுப்பு உள்ள உணவாக இருக்க வேண்டும்.

    * காலையில் நிதானமாகவோ அல்லது சுறுசுறுப்பாகவோ 10 நிமிடங்களாவது நடக்க வேண்டும். அதுவும் காற்றோட்டமான வெளி சூழ்நிலையில் இருந்தால் மிகவும் நல்லது. ஆரோக்கியமான காற்றும், நடையும் அன்றைய நாளை பயனுள்ளதாக்கும்.

    * அன்றைக்கான வேலையினை எழுதி வையுங்கள். இதனை முதல் நாள் இரவு கூட செய்யலாம். இட்லி அரிசி ஊரப்போவது முதல் இன்டர்வியூ நேரம் வரை அனைத்தையும் எழுதுங்கள். ஒன்று ஒன்றாக முடிக்கும்போது மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

    10 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள் என்று சொல்கின்றோமே. அதன் பொருள் ஒரு இடத்தில் அசையாது. கண்களை மூடி அமைதியாய் இருத்தல் என்ற பொருள் கொள்ளலாம். இதனை தொடர்ந்து செய்யும் போது கண் கூடாக சிலவற்றினை நீங்களே உணருவீர்கள்.

    * நம் பெருமையை நாமே தம்பட்டம் அடித்து நம் மரியாதையினை நாமே குறைத்துக் கொள்ள மாட்டோம். நம் தவறுகளை நியாயப்படுத்த மாட்டோம்.

    * சதா சர்வ காலமும் பிறரிடம் குற்றம், குறைகள் கண்டு பிடித்து பேச மாட்டோம்.

    * நம் செயல்கள் வெற்றியினை, சாதனையினை பேசும். நம் வார்த்தைகள் பேசாது.

    * வார்த்தைகளில் நல்ல கட்டுப்பாடு இருக்கும்.

    * அதிகமான 'ஸ்கிரீன்' நேரத்தினை மனம் விரும்பாது.

    முயன்றுதான் பார்ப்போமே.

    ஒரு சில ஆய்வாளர்களின் நிருபிக்கப்படாத கருத்து ஒன்று இருக்கிறது. நமது வயிறு, குடல் இதனை 2-வது மூளை என்பார்கள். 'எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பது போல் 'எண் சாண் உடம்பிற்கு வயிறும் பிரதானம்'தான். இங்கு சொல்லப்படுவதின் பொருள் பல விருந்து, உணவுகளைப் பற்றியது அல்ல. மனம், உணர்ச்சி, உணர்வு, நியூட்டிசன் என்பார்களே அத்தகையது. சில நேரங்களில் நம் உள் உணர்வு ஒரு சொல், ஒரு வாய்ப்பு ஏற்படும் போது நம் ஆத்மாவுடன் ஒத்துப் போவது போல் இருக்கும்.

    சில நேரங்களில் எல்லாம் சரியாக இருந்தும் கூட உள் உணர்வு ஏதோ சரியில்லை என்று கூறும். ஆக உங்கள் உள் உணர்வு கூறுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு முதலில் மனமும், உடலும் அங்கும் இங்கும் அலையாது. பரபரப்பு இன்றி இருக்க வேண்டும். இதற்கு தியானம் பெரிதும் உதவும்.

    Next Story
    ×