என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
சமூக வலைதள கட்டளை மையம்
- கட்டளை மையம் உருவாக்குவதற்கு முன்பே அதன் குறிக்கோள் என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
- சில கூடுதல் சேவைகளைச்செய்தால் நிச்சயம் சரியாக வரும்.
"ஏங்க வாசல்ல காய்கறி வந்திருக்கு! ஒருகிலோ பீன்ஸ் வாங்கிக்கங்க! பைசா நா அப்புறமா குடுத்துப்பேன்!"
"அனிதா! உன்ன பிரிஜ்ஜத்துடைச்சு வெய்யின்னேனே! அந்த அலமாரில ஸ்பாஞ்ச் இருக்கு பாரு!"
"ரமேஷ்! மோட்டார் சத்தம் சரியாவே வரல! போய் பைப் திறந்துபாரு, டாங்குல தண்ணி ஏறுதா இல்ல மோட்டார் வெறுமன ஓடிட்டு இருக்கான்னு!"
சமையல் அறையிலிருந்து அம்மா நடத்தும் இந்த ராஜாங்கத்துக்கு இன்றைய பெயர் "கட்டளை மையம்" (Command Center அல்லது War Room).
தேர்தல் சமயங்களில் எல்லா டி.வி.யிலும் ஒரு அறையில் விற்பன்னர்களை உட்கார வைத்து சுவர் முழுக்க வரை படங்களாகப்போட்டு ஒவ்வொரு தொகுதியாக மாய்ந்து மாய்ந்து அலசும் இடம் கூட கட்டளை மையம் தான்!
செப்டம்பர் 11, நியூயார்க்கில் அந்த விபரீதம் நிகழ்ந்த போது அப்போதைய மேயர் ரூடி ஜியுலியானி கட்டளை மையத்தில் இருந்து நடத்தின அபார காப்பாற்றுதல் செயல் சரித்திரப்பிரசித்தி பெற்றுவிட்டதை நீங்கள் அறிவீர்கள்.
இந்தக்"கட்டளை மைய" ஐடியா இப்போது வியாபாரங்களிலும் பரவ ஆரம்பித்து விட்டதைப்பார்க்கிறோம்.
ஒரு மிகப்பெரிய அறையில் மாபெரும் எல் சி டி திரையில் சமூக வலைத்தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடல்கள், கருத்துக்கள், ஓடும் இமேஜுகள் எல்லாவற்றையும் படித்து, அலசி ஆராய்ந்து அதன் செய்திகளையும் உள் அர்த்தங்களையும் கம்பெனியின் விற்பனை மற்றும் உயர் நிர்வாகத்திற்கு ரிப்போர்டுகளாக அனுப்புவார்கள்.
இந்த உடனுக்குடன் செய்தி அலசல்கள் தத்தம் கம்பெனியின் பொருள் பற்றிய மக்களின் மதிப்பீட்டை மானேஜ்மெண்ட் புரிந்துகொண்டு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுத்து கம்பெனி மார்க்கெட்டில் தம் நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ள முடிகிறது. போட்டி கம்பெனிகளின் செயல்பாடுகளும் ஒரளவுக்கு வெளிப்பட்டு இன்னும் சீரிய முடிவுகளை எடுக்க ஏதுவாகிறது.
DELL என்னும் கம்ப்யூட்டர் கம்பெனி இந்த கட்டளை மையத்தை 2010லேயே உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்கள் என்ன அவ்வளவு முக்கியமா?
நிச்சயமாக!
சமூக வலைத்தளங்களில் உலாவுபவர்களில் 47 சதவீதம் மக்கள், கம்பெனிகளின் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய தம் கருத்துக்களையும் கண்டனங்களையும் பகிர்ந்துகொண்டு விடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே.
"டிஜிட்டல் யுகத்தில் இன்று இதை ஒதுக்கிவிட முடியுமா?"
கேள்வி கேட்கிறார் டிஜிட்டல் தொழில் விற்பன்னர் ராஜீவ் டிங்க்ரா. நாசிக்கில் உள்ள சுலா ஒயின்யார்ட் என்னும் ஒயின் கம்பெனியின் உதவித்தலைவர் சிசிலியா "இந்தக்கட்டளை மையத்தின் மூலம் நாங்கள் பெற்ற பல விஷயங்கள் கஸ்டமர்களை மிக நன்றாகப்பு ரிந்துகொண்டு அதற்கேற்றார் போல எங்கள் ஒயின்களின் தரத்தை மாற்றி அமைத்து விற்பனையைப்பெருக்கி இருக்கிறோம்" என்று சிலாகிக்கிறார்.
இந்தக்கட்டளை மையங்கள் இன்னும் பல வித சேவைகளைச்செய்கின்றன. சில கம்பெனிகள் இவற்றின் மூலம் சமூக அலசல், மார்க்கெட் தகவல்கள், போட்டியாளர் நடவடிக்கைகள், வலைத்தள பாபுலாரிட்டி என்று கம்பெனிக்கும் பொருட்களுக்கும் தேவையான பல வித செய்திகளைப்பெற்று அதற்கேற்றார் போல் முடிவெடுத்து முன்னேற முடிகிறதாம்.
"அவினாஷ்! கொல்கத்தாவுல நம்ம டூத்பேஸ்டுக்கு நாளையிலேர்ந்து ஒரு 3 சதவீதம் டிஸ்கவுண்ட் அதிகப்படுத்து! வரும் வாரம் நடக்கப்போகும் புட்பால் மாட்ச்சையொட்டின்னு விளம்பரப்படுத்தச்சொல்லு!"
"என்ன சார் திடீர்னு?"
"இப்பத்தான் கமாண்ட் செண்டர்லேர்ந்து நியூஸ் வந்தது! கோல்கேட் போன வாரம் ஐ பி எல் மாட்ச்சுக்காக டிஸ்கவுண்ட் கொடுத்து சேல்ஸ் 13 சதவீதம் உசந்திருக்குப்பா! நாம விடலாமா? போ, உடனே பண்ணு!"
இதில் ஒரு முக்கிய சூட்சுமம் இருக்கிறது. கட்டளை மையம் உருவாக்குவதற்கு முன்பே அதன் குறிக்கோள் என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ற மென்பொருளும் சரியான தகுதியுடைய ஆட்களையும் நியமித்து கட்டளை மையத்தின் முதலீட்டை கம்பெனிக்கு சாதகமாக்க முடியும். மார்க்கெட்டிங்குக்காக என்று கட்டளை மையம் அமைத்துவிட்டு அதில் பொருளின் உற்பத்தி பற்றிய டெக்னிக்கல் தகவல்களைச்சேகரிக்கச்செய்வது பயன் தராது. ஆக, தேவைக்கு ஏற்ற மாதிரி தொழில் நுட்ப வசதிகளும் தகுதியான ஆள் பலமும் முதலீடு செய்ய வேண்டும்.
"என்னப்பா ரமேஷ்! என்ன தகவல் கெடக்கத்து?"
"சார்! நா பூரா டேட்டா எடுத்துட்டேன்! அந்த லொகால்லிடியில நாம பிராஞ்ச் திறக்க்கூடாது சார்!"
"ஏன் அப்படிச்சொல்றே?"
"அந்த மக்களோட உணவுப்பழக்க வழக்க தகவல்களை எடுத்தோம் சார்! அங்க ரொட்டிக்கு வெண்ணைதான் அதிகம் பயன் படுத்தறாங்க. அதனால நம்ம சீஸ் விற்பனைக்கு அந்த ஏரியா சரியாவராது சார்!"
"சாரி சார்! நா ஒண்ணு சொல்லவா?"
"சொல்லு உமேஷ்!"
" அங்க சீஸ் சாப்பிடும் பழக்கம் இல்லைதான்! அதனாலேயே நாம அங்கதான் நம்ம பிராஞ்ச் திறக்கணும்! நெறய வித்துடலாம் நாம சரியா மார்க்கெட் பண்ணினா!"
அந்த வருஷம் புரொமோஷன் யாருக்கு எறwwwன்று நான் சொல்ல வேண்டியதில்லை!
இந்த தொழில் நுட்ப மென்பொருட்கள் மிகச்சுலபமாக தகவலளை அள்ளித்தந்து விடும். ஆனால் அந்தத் தகவல்களை அலசி ஆராய்ந்து உண்மையான பயனுள்ள விஷயங்களைக்கண்டு அதை வியாபாரத்திற்குப்பயன் படுத்தும் புத்திசாலித்தனம் கட்டளை மையத்தின் வேலை செய்பவர்களிடம் தாம் இருக்கிறது.
எனவே கட்டளை மையத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாமிகள் மிக ஜாக்கிரதையாக சரியாக கணிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களது செயல்பாடுகளை இன்னமும் மேம்படுத்துவதற்காக தனி இயலே உருவாகிவிட்டது. Data Science and Analytics என்னும் அந்த இயலில் இப்போது பல பல்கலைக்க ழகங்களில் பாடத்திட்டம் உரு வாக்கப்பட்டு டிகிரி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
"தம்பி! இந்த கட்டளை மையமாமே! நா ஒண்ணு வெக்கலாம்னு பாக்கறேன்!"
"நீங்க யாரு?"
"நா நம்ம காந்தி மார்க்கெட்டுல மளிகைக்கடை வெச்சிருக்கேன்!"
"சார்! மளிகைக்கடைக்கெல்லாம் கட்டளை மையம் சரியா வராது! கெளம்புங்க!"
இல்லை, சரியாக வரும்! கூடிய விரைவில் வரப்போகிறது.
அந்த தொகுதியில் உள்ள மக்களின் தேவைகளைப்புரிந்து, அதற்கேற்ற பொருட்களை வாங்கி, அவர்களின் செலவுத்திறனுக்கேற்ப விலை வைத்து, சில கூடுதல் சேவைகளைச்செய்தால் நிச்சயம் சரியாக வரும். அந்த மளிகை வியாபாரத்தின் நிதி நிலைமைக்கேற்ப இதற்கான முதலீடும் கொஞ்சமாக செய்து கட்டளை மையத்தை உருவாக்க முடியும் என்பதுதான் இன்றைய இணைய, டிஜிட்டல் தகவல் தொழில் நுட்ப காலத்தின் வரம்!
முன்னேறி வரும் இணைய டிஜிட்டல் தொழில் நுட்ப உலகில் இந்தக்கட்டளை மையங்கள் சின்ன சின்ன வியாபாரங்களூக்கும் பேருதவியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்