search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே!... அத்தியாயம்-2
    X

    உசுரே நீ தானே!... அத்தியாயம்-2

    • திவ்யாவுக்கு அவனை பார்த்ததும் பிடிக்கவில்லை.
    • பழைய நினைவுக்கு சென்ற திவ்யா, நினைவு கலைந்து பார்த்தாள்.

    அது திருநெல்வேலியிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற இன்ஜினியரிங் காலேஜ். அந்த காலேஜில் எச்.ஆர். டிபார்ட்மெண்டில் (ஹியூமன் ரிசோர்சஸ் டிபார்ட்மென்ட்டில்) அட்மின் ஆபிசராக வேலை செய்பவள் திவ்யா.

    அதே கல்லூரியில் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் லெக்சரராக வேலை செய்பவள் மேரி. ஒரே கல்லூரி என்பதால் ஹாய் என ஆரம்பித்த நட்பு 'வாடி... போடி...' என நெருக்கமானது.

    மத்தியான லஞ்ச் ஷேர் செய்ய ஆரம்பித்து டூவீலரை ஷேர் செய்யும் அளவுக்கு நெருக்கமானது.

    இருவரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வரும் அளவிற்கு நெருக்கமானார்கள். ஒரு நாள், திவ்யாவிற்கு பார்த்தாலே பிடிக்காமல் போன அந்த டேவிட்டை சந்தித்தாள் மேரி.

    இவள் போன அன்று மேரியின் அம்மா மதிய சமையல் செய்து கொண்டு இருக்க, திவ்யாவும், மேரியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..

    திடீரென்று வாசலில் ஆட்டோ சத்தமும் தொடர்ந்து, வெளியே ஷூ கழட்டும் சத்தமும் கேட்டது.

    சற்று நேரத்தில், அச்சு அசலாய் 'பஞ்சு மிட்டாய் சேல கட்டி' பாட்டில் வரும் நடிகர் நெப்போலியன் உயரத்தில் கையில் சூட்கேஸ் மற்றும் முதுகில் லேப்டாப் பேக்குடன் உள்ளே நுழைந்தான் டேவிட்.

    அனிச்சையாய் திவ்யா எழுந்து நிற்க மேரி, "உட்கார்டி..." என இழுத்து திய்வாவை அமர வைத்தவள், டேவிட்டிடம் "என்னண்ணா பஸ் லேட்டா...? 9 மணிக்கு வர்ரேன்ன... 10.15க்கு வர...?" என கேட்க,

    "ஆமா... பஸ் லேட்..." என ஒற்றை வரியில் பதில் அளித்த டேவிட், திவ்யாவை மீண்டும் ஒரு லுக் விட்டு படியேறி மேலே சென்றான்.


    திவ்யாவுக்கு அவனை பார்த்ததும் பிடிக்கவில்லை. "இதென்ன கறுப்பா... 6 அடி உயரத்துல... இதுல முறுக்கி விட்ட மீசை வேற..." என யோசித்தவள், மேரியிடம் திரும்பி, "உங்க அண்ணன் இன்னிக்கு ஊர்ல இருந்து வரார்னு சொல்லவே இல்ல..." என கேட்க..

    "மறந்துட்டேன்டி... அவனை திருச்சிலே இருந்து திருநெல்வேலிக்கு மாத்திட்டாங்க... இனிமே அய்யாவுக்கு இங்கதான் வேலை... இனி எங்க வீட்டுல டி.வி. பாக்றதுலே எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்..." என கூறிய மேரி தொடர்ந்து,

    "ஆமா... நீ ஏண்டி எங்க அண்ணனை பார்த்து பேஸ்து அடிச்சு நிக்கிற..." என கேட்க,"எனக்கு உங்க அண்ணனை பார்த்தாலே பிடிக்கலை..." என சொல்ல நினைத்தவள் அதை தவிர்த்து, "ஒண்ணுமில்லையே... திடீர்ன்னு பார்த்தனா... அதான்..."என இழுக்க, "கூச்சமாக்கும்..." என அவள் தோளை இழுத்து சிரித்தாள் மேரி.

    டைனிங் டேபிள்.

    மேரியின் அம்மா சமையல் தனி ருசி. எப்போது, திவ்யா மேரியின் வீட்டிற்கு வந்தாலும், மேரியின் அம்மா, திவ்யாவுக்கு பிடித்த மெனுவை செய்து விடுவாள்.

    அன்றும் மதிய சாப்பாட்டை அப்படி சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது தான் அந்த 'கிட்டார்' வாசிக்கும் சத்தம் கேட்டது. அருமையான டியூன். அதை கேட்க கேட்க ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

    "யாருடி அது கிட்டார் வாசிக்கிறது..." திவ்யா மேரியிடம் கேட்டாள்.

    "வேற யாரு... என் தத்து புத்திரன்தான். ஊருலேருந்து வந்து 'ப்ரெஷ்அப்' ஆயிட்டு வரேன்னு போனான்... இந்தா... கிட்டார் எடுத்துட்டு உட்கார்ந்துட்டார்ல... இனி அய்யா மூணு மணிக்குத்தான் கீழ வருவாரு..."என மேரியின் அம்மா அங்கலாய்க்க,

    அப்போது தன் ரூமிலிருந்து வெளிப்பட்ட மேரியின் அப்பா - "விடு லிசா... வீட்டுக்கு வந்திருக்க பொண்ணு முன்னாடி பையனை பத்தி உயர்வா சொல்லாம... இப்படி அங்கலாய்கிறீயே...?" என்றவர், திவ்யாவிடம் திரும்பி, "யம்மாடி... என் பையன் டேவிட்டுக்கு மியூசிக்குனா ரொம்ப இஷ்டம்... ஒரு இசைக்குழு கூட வெச்சிருக்கான்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


    ஓய்வு நேரங்கள்ல இசைக்குழுவோட கச்சேரி பண்றதுதான் பொழுதுபோக்கே! கேள்வி பட்டிருப்பியே...'கீதாலயா இசைக்குழு' - இவன் நடத்துறதுதான்.."என கூற அவரையே ஆச்சரியமாய் பார்த்தாள் திவ்யா.

    தொடர்ந்து மேரியின் அப்பா, "ஏதோ படிச்ச படிப்புக்கு ஒரு பிரைவேட் கம்பெனியில் ஹெச்.ஆராக ஆகி, ஹியூமன் ரிசோர்ஸ்ல அட்மீனா வேலை பார்க்கிறானே தவிர... மனசெல்லாம் இசை மேலத்தான்... எப்படி கிடார்ல விளையாடுறான் பாரு..." என்றவர், தன் மனைவி லிசாவிடம் "சோத்த போடுடி... பசிக்குது..." என அவரும் டேபிளில் அமர்ந்தார்.

    'என்னது? அவனும் ஹெச்.ஆர்.டிபார்மெண்ட்லதான் வேலை பார்க்கிறானா... எனக்கும் இசைன்னா பிடிக்கும்... டேவிட்டுக்கும் இசை பிடிக்கும் கிறாங்க... என்ன இது ஒற்றுமை...' என தனக்குள் திவ்யா யோசிக்க...

    அவள் யோசிப்பதையே கண் கொட்டாமல் பார்த்த மேரி "என்னடி... ஆஜானுபாகுவா ஆறடி உயரமும், மிலிட்டரிக்காரன் மாதிரி முறுக்கிவிட்ட மீசையுமா பார்த்த ஆளுக்குள்ள இப்படி ஒரு மென்மையான இசை ஆர்வமான்னா யோசிக்கிறியா...?"

    மேரி கேட்க... 'இல்லை' என தலையாட்டினாள், உள்ளுக்குள்ள 'ஆமா ' என சொல்ல நினைத்து!

    இப்படித்தான் நடந்தது - அவளுக்கும் டேவிட்டுக்குமான முதல் சந்திப்பு.

    'க்ரீச்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. கோவில் வாசலில் அவள் அண்ணன் மிரட்டிவிட்டு போன பிறகு, பழைய நினைவுக்கு சென்ற திவ்யா, நினைவு கலைந்து பார்த்தாள்.

    வந்து நின்ற கார்ல இருந்து திவ்யாவின் அம்மாவும், அப்பாவும் இறங்கினர். கழுத்தில் தாலியுடன் தன் மகள் டேவிட் மற்றம் நண்பர்களுடன் நிற்பதை பார்த்தவர்கள், அவர்களை நோக்கி வேகமாய் வந்தனர்.

    அப்பாவும் அம்மாவும் தன்னை நோக்கி வருவதை பார்த்து சற்று பதட்டம் அடைந்த திவ்யா, பக்கத்தில் இருக்கும் டேவிட்டை பார்க்க, டேவிட்டும் அவளை குழப்பமாக பார்க்கிறான் .

    "இவங்க எப்படி நாம இந்த கோவிலில் இருக்கும்னு தெரிஞ்சு வந்தாங்க?" டேவிட் கேட்க, உடனே செந்தில் "நான்தான் அவங்களுக்கு வாட்ஸப்ல மெசேஜ் போட்டேன்... உங்க அண்ணனுக்கு நீ இந்த கோவிலில் இருக்கீங்கன்னு அனுப்புன இல்ல... அப்பவே இவங்களுக்கும் மெசேஜ் போட்டு விட்டேன்..."- என கூற ,

    அருகில் வந்த திவ்யாவின் பெற்றோர் ,திவ்யா கழுத்தில் புது தாலியுடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மகளை ஆதரவாய் கட்டி அணைத்த திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி, "திவ்யா... நாங்க திருச்செந்தூருக்கு போயிட்டு இருக்கும்போது, நல்ல வேலையா செந்தில் தம்பி கல்யாணம் திருச்செந்தூர் கோவிலில் இல்ல.. இந்த கோவிலுக்கு வந்துட்டோம்னா மெசேஜ் அனுப்புச்சு.. நாங்க வண்டிய திருப்பி இங்க வர்றதுக்குள்ள நீ கல்யாணத்தையே முடிச்சிட்ட..."-எனக்கூற,

    "அதான்... அவன் அண்ணன் துரத்திட்டு வந்திருப்பான் ! அவளுக்கு என்ன பண்ணனும்னு தெரிஞ்சிருக்காது... டக்குனு இந்த கோவில் வாசல நிப்பாட்டி, கல்யாணத்த முடிச்சுட்டா...! அப்படித்தானம்மா?" என அவள் அப்பா கேட்க, "ஆமாப்பா..." என தலை அசைத்தாள திவ்யா.

    "சார்... நல்ல குடும்பம் சார் உங்க குடும்பம்! ஒரு பக்கம் அண்ணன் வில்லனா மாறி,' தங்கச்சி இன்னொரு மதத்துக்காரன கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு 'குறுக்க கட்டைய போட்டுக்கிட்டு எப்படா சண்டை போடுவேன்னு திரிகிறான்... அவள பெத்த நீங்க ரெண்டு பேரும் அண்ணனுக்கு தெரியாம சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க... இந்த கதை எங்க போய் முடியுமோ" என கூறுகிறான் செந்தில்.

    பக்கத்துல வந்த லாரன்ஸ், "டேய் திவ்யாவோட அப்பா ஆரம்பத்துல இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதுக்கப்புறம் திவ்யா அம்மா கூட சேர்ந்து சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு... ஆனா திவ்யாவோட அண்ணன் கூட சேர்ந்துக்கிட்டு லவ்வ எதிர்க்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு அதே சமயத்துல அவ அண்ணனுக்கு தெரியாம திவ்யா காதலுக்கும் இந்த கல்யாணத்துக்கும் சப்போர்ட் பண்ணாங்களே... அதுதாண்டா அவங்க பண்ண டிராமாவுலே ஹைலைட்...!" எனக் கூற ,எல்லோரும் சிரிக்கிறார்கள்.

    "அப்புறம் என்னங்க... கல்யாணம் முடிஞ்சாச்சு... வாங்க பக்கத்து ஓட்டல்ல போய் காலைல டிபன் முடிச்சுடுவோம்..."- என லாரன்ஸ் கூற, எல்லோரும் அங்கிருந்து நகருகிறார்கள்.

    ஆனால் முகம் நிறைந்த வன்மத்துடனும் தன்னை எதிர்த்து தனக்குப் பிடிக்காத மதத்து காரனை திவ்யா கல்யாணம் முடித்து விட்டாள் என்ற கோபத்துடனும் தன் சகாக்களுடன் ஒரு மதுபான கடைக்குள் நுழைந்து, வாங்குன சரக்கு பாட்டிலை திறந்து தண்ணி கூட கலக்காமல் 'கடகட 'என்று குடித்தான் திவ்யாவின் அண்ணன் பெருமாள்.

    பக்கத்தில் இருந்த பெருமாளின் நண்பன் "இனிமே என்ன பெருமாள் பண்ண போற ?" என கேட்க," கல்யாணம் முடிஞ்சாலும் அவங்க இந்த ஊர்ல தான வாழனும்... எப்படி நிம்மதியா வாழ்கிறார்கள் என நானும் பார்க்கிறேன்..."- எனக்கூறி, மீண்டும் சரக்கை மடமட என பெருமாள் குடிக்க ,

    இப்படி வன்மத்துடன் அண்ணன் காத்துக் கொண்டிருக்கிறான் என தெரியாமல் கல்யாணத்துக்கு ஒத்துழைத்த டேவிட் நண்பர்களுடனும், அம்மா அப்பாவுடனும் சந்தோஷமாக டேவிட் அருகில் அமர்ந்திருக்க சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

    (தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com

    Next Story
    ×