search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஐபிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
    X

    ஐபிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

    ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். #RRvCSK #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    ராயுடு 12 ரன்னில் அவுட்டானார். வாட்சன் மற்றும் ரெய்னா ஜோடி 86 ரன்கள் சேர்த்தது. வாட்சன் 39 ரன்களில் வெளியேறினார். ரெய்னா சிறப்பாக விளையாடி 52 ரன்களில் அவுட் ஆனார்.

    அதன்பின் இறங்கிய தோனி நிதானமாக ஆடினார். பில்லிங்ஸ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் எடுத்தார். 

    இதையடுத்து, 177  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும், ரகானே 4 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 21 ரன்னிலும்,  பிரசாந்த சோப்ரா 8 ரன்னிலும், பின்னி 22 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 12 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய பட்லர் அரை சதமடித்து அசத்தினார்.

    பரபரப்பான கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் 2 ரன்களும், 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தன. 4-வது பந்தில் சிக்சர் பறந்தது. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.

    சென்னை அணி சார்பில் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், பிராவோ, டேவிட் வில்லே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #RRvCSK
    Next Story
    ×