search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம், டக்அவுட்டை பதிவு செய்த வீரர்கள் சாதனையில் இணைந்தார் அம்பதி ராயுடு
    X

    சதம், டக்அவுட்டை பதிவு செய்த வீரர்கள் சாதனையில் இணைந்தார் அம்பதி ராயுடு

    குவாலிபையர் 1-ல் டக்அவுட் ஆனதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஒரு அணிக்கெதிராக சதம் மற்றும் டக்அவுட் ஆகி சாதனையில் இணைந்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 1 நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 139 ரன்கள் சேர்த்தது. பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

    4-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா க்ளீன் போல்டானர். அதன்பின் இந்த தொடரில் அசத்தி வரும் அம்பதி ராயுடு களம் இறங்கினார். இவர் தான் சந்தித்த முதல் பந்திலே க்ளீன் போல்டானார். இதன்மூலம் ஒரே அணிக்கெதிராக ஒரு சீசனில் சதமும், டக்அவுட் ஆகியும் சாதனை புத்தகத்தில் அம்பதி ராயுடு இடம்பிடித்துள்ளார்.



    இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 2009-ல் சதமும், டக்அவுட்டும் ஆகியுள்ளார். டேவிட் வார்னர் 2010-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராகவும், கிறிஸ் கெய்ல் 2011-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராகவும், 2011-ல் கில்கிறிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராகவும், முரளி விஜய் 2012-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராகவும், விராட் கோலி 2016-ல் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராகவும் சதம் அடித்ததுடன் டக்அவுட்டும் ஆகியுள்ளனர்.
    Next Story
    ×