search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உபேர் கோப்பை பேட்மிண்டன் - இந்தியாவை வீழ்த்தியது ஜப்பான்
    X

    உபேர் கோப்பை பேட்மிண்டன் - இந்தியாவை வீழ்த்தியது ஜப்பான்

    பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரின் பெண்கள் பிரிவில் ஜப்பான் 5-0 என இந்தியாவை வீழ்த்தியது. #UberCup #INDvJPN

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா பெண்கள் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. 

    முதலில் சாய்னா நேவால், ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 21-19 என யமகுச்சி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சாய்னா 21-9 என அந்த செட்டை கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் யமகுச்சி 22-20 என அந்த செட்டையும் கைப்பற்றினார். இதனால் 21-19, 9-21, 22-20 என்ற செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்றார்.

    இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்பாடே- பிரஜக்தா சவந்த் ஜோடி 15-21, 6-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது. மற்றொரு ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா - நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-13 என ஒகுஹாரா எளிதில் வெற்றி பெற்றார்.

    2-வது இரட்டையர் பிரிவில் மேகனா ஜக்கம்புடி - வைஷ்ணவி பலே ஜோடி 21-8, 21-17 என தோல்வியடைந்தது. கடைசி ஒற்றையர் பிரிவில் அனுரா பிரபுதேசாய் 21-12, 21-7 என ஜப்பான் வீராங்கனை தகாஹாஷியிடம் தோல்வியடைந்தார். இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்தியா 5-0 என ஜப்பானிடம் வீழ்ந்தது. #UberCup #INDvJPN
    Next Story
    ×