search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2
    X

    லீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2

    லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். 10-வது ஓவரின் முதல் பந்தில் அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 



    இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.



    நிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கியுள்ளது. #ENGvPAK
    Next Story
    ×