search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுடன் அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பானது- ரகானே
    X

    ஆப்கானிஸ்தானுடன் அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பானது- ரகானே

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பானது என இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரகானே கூறியுள்ளார். #IND #AFG #Rahane
    பெங்களூர்:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுக டெஸ்ட் போட்டி ஆகும். அந்த அணி டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற 12-வது அணி ஆகும்.

    இப்போட்டிக்கு இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். போட்டி குறித்து ரகானே கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தானின் அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த போட்டி அவர்களுக்கு வரலாற்று தருணம் ஆகும். இதில் நாங்கள் பங்கேற்று விளையாடுவது அற்புதமானது. ஆப்கானிஸ்தான் சிறந்த அணியாகும். சில திறமை வாய்ந்த வீரர்கள் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

    அந்த உத்வேகத்தை டெஸ்ட் போட்டியிலும் தொடருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது எங்களுக்கு சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கவுரமாகும்.

    இதில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது பெருமை வாய்ந்தது.

    எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். தனிப்பட்ட முறையிலும் அதேவேளையில் ஒரு அணியாகவும் திறமையை வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #IND #AFG #Rahane
    Next Story
    ×