search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுண்டு விரல் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஷாகிப் அல் ஹசன்
    X

    சுண்டு விரல் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஷாகிப் அல் ஹசன்

    சுண்டு விரல் காயம் நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்ததால், தற்போது ஷாகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை செய்துள்ளார். #ShakibAlHasan
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். 31 வயதாகும் இவருக்கு இலங்கை தொடரின்போது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை.

    சமீபத்தில் வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

    ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கியதால் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஷாகிப் அல் ஹசன் விளையாட வேண்டும் என்று விரும்பியது. ஷாகிப் அல் ஹசனும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். பாகிஸ்தான் போட்டிக்கு முன் வலி அதிகம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகினார்.



    அத்துடன் உடனடியாக சொந்த நாடு திரும்பினார். சொந்த நாடு திரும்பிய வேகத்தில் சுண்டு விரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன் காயம் குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘நான் சொந்த ஊர் திரும்பிய பின்னர், எனது சுண்டு விரல் இவ்வளவு மோசமான நிலையை அடைந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சுண்டு விரலில் அதிகமான வலியும், வீக்கமும் இருந்தது. சுண்டு விரலில் 60 முதல் 70 சதவீதம் வரை நோய் தொற்று இருந்தது. விரலில் இருந்து சீழ் வெளியே எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×