search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே, ரிஷப் பந்த் ஆட்டத்தால் முன்னிலையை நோக்கி இந்தியா, 2-வது நாள் முடிவில் 308/4
    X

    ரகானே, ரிஷப் பந்த் ஆட்டத்தால் முன்னிலையை நோக்கி இந்தியா, 2-வது நாள் முடிவில் 308/4

    ரகானே மற்றும் ரிஷப் பந்து ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மிகப்பெரிய முன்னிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரோஸ்டன் சேஸ் (106) சதம் அடிக்கவும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 52 ரன்கள் அடிக்கவும் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், புஜாரா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் முதல் போட்டியில் சதம் அடித்த பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 53 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 78 பந்தில் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். விராட் கோலி ஆட்டமிழக்கும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸை விட 149 ரன்கள் பின்தங்கியிருந்தது.



    இந்நிலையில்தான் ரகானே உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை தாண்டி வீறுநடை போட்டது. இருவரின் ஆட்டத்தால் இந்தியா முன்னிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இருவரும் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 81 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 75 ரன்னுடனும், ரிஷப் பந்த் 85 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. நாளை இருவரும் சதம் அடித்தால் இந்தியா மிகப்பெரிய முன்னிலையை பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×