என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காமன்வெல்த் வாள் சண்டை: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்- புதிய சாதனை படைத்தார்
Byமாலை மலர்25 Nov 2018 2:00 PM IST (Updated: 25 Nov 2018 2:00 PM IST)
காமன்வெல்த் வாள் சண்டையில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். #BhavaniDevi
காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் சென்னையை சேர்ந்த சிஏ பவானி தேவி பங்கேற்றார்.
அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை கெய்ட்லினை 15-3 என்ற கணக்கிலும், அரை இறுதியில் ஸ்காட்லாந்தை சேர்ந்த காட்ரியோனாங்கை 15-5 என்ற கணக்கிலும் எளிதில் வீழ்த்தினார்.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த எமிலி ராக்சுடன் மோதினார். உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான எமியை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் வாள்சண்டையில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானிதேவி படைத்தார்.
பவானிதேவி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சேட்லைட் காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு உலககோப்பை சேட்லைட் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருந்தார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Next Story
×