search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 3ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். டிராவிஸ் ஹெட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 72 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3  விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

    இதையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.



    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் எடுத்தது.  முரளி விஜய் 18 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து லோகேஷ் ராகுல் 44 ரன்களில் அவுட்டானார். அப்போதுஅணியின் எண்ணிக்கை 76 ஆக இருந்தது.

    அடுத்து இறங்கிய புஜாரா பொறுப்புடன் நிதானமாக விளையாடினார். கேப்டன் விராட் கோலி - புஜாரா ஜோடி 71 ரன்களை கடந்த நிலையில் விராட் கோலி 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். 

    மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லியான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #AUSvIND
    Next Story
    ×