search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்ப்பிருந்தும் தடுக்கவில்லை: கேப்டன் பொறுப்பில் தோற்றுவிட்டேன்- பால் டேம்பரிங் குறித்து ஸ்மித் பேட்டி
    X

    வாய்ப்பிருந்தும் தடுக்கவில்லை: கேப்டன் பொறுப்பில் தோற்றுவிட்டேன்- பால் டேம்பரிங் குறித்து ஸ்மித் பேட்டி

    பால் டேம்பரிங் விவகாரத்தில் முதன்முறையாக பேட்டியளித்த ஸ்மித், வாய்ப்பிருந்தும் தடுக்கவில்லை, கேப்டன் பொறுப்பில் தோற்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். #Smith
    கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை ஒருவகை உப்புத்தாள் மூலம் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக்காரணமாக டேவிட் வார்னர் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும். அவர் தடுக்க தவறிவிட்டார் என்றும் தெரியவந்தது.

    இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்த ஸ்மித், சிட்னி மைதானத்தில் கண்ணீர் மல்க சோகத்துடன் வெளியேறினார்.

    இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் உள்ளூரில் நடைபெறும் முதன்மையான தொடர்களிலும், சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாமல் உள்ளனர்.

    இந்நிலையில் முதன்முறையாக இன்று ஸ்மித் பத்திரிகையாளர்கள்கு பேட்டியளித்தார். அப்போது பால் டேம்பரிங் சம்பவத்தை நான் தடுத்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    பால் டேம்பரிங் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘வீரர்கள் அறையில் நான் சிலரை கடந்து செல்லும்போது, பால் டேம்பரிங் திட்டத்தை தடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், நான் அதை செய்யவில்லை. என்னுடைய கேப்டன் பொறுப்பு தோல்வியடைந்து விட்டது. இது சில விஷயங்கள் நடப்பதற்கு சாத்தியக்கூறாக அமைந்துவிட்டது. இந்த திட்டம் வெளியில் சென்று மைதானத்தில் நடந்துவிட்டது.

    அதைப்பற்றி எதுவும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்வதைவிட, திட்டத்தை நிறுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். கேப்டனாக எனது பொறுப்பில் நான் தோற்றுவிட்டேன். அதற்காக நான் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்’’ என்றேன்.
    Next Story
    ×