என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புத்தாண்டு தினத்திலும் பயிற்சி மேற்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள்
Byமாலை மலர்1 Jan 2019 2:49 PM IST (Updated: 1 Jan 2019 2:49 PM IST)
சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் புத்தாண்டு தினமான இன்றும் பயிற்சியில் ஈடுபட்டனர். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளைமறுநாள் (3-ந்தேதி - வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெர்த் டெஸ்டில் விராட் கோலியும், அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் புஜாராவும் சதம் விளாசினார்கள். ஆனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இதுவரை சதம் ஏதும் அடிக்கவில்லை.
பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி பந்து வீச்சை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் தொடரை இழக்க நேரிடும். இதனால் புத்தாண்டு கொண்டாடிய கையோடு ஆஸ்திரேலியா அணியின் ஒரு பகுதியினர் சிட்னியில் பயிற்சியை தொடங்கினார்கள்.
தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளதால், சிட்னி டெஸ்டில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிஞ்ச் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
டிம் பெய்ன், நாதன் லயன், கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்னஸ் லாபஸ்சாக்னே ஆகியோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த செய்தியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Next Story
×