என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய சீனியர் ஆக்கி பி பிரிவின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி
Byமாலை மலர்20 Jan 2019 4:53 PM IST (Updated: 20 Jan 2019 4:53 PM IST)
தேசிய சீனியர் ஆக்கி பி பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழகம், மத்திய தலைமை செயலகம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #NationalHockey #Championship #TamilNadu
சென்னை:
9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-மத்திய தலைமை செயலக அணிகள் மோதின.
இந்த போட்டியில் மத்திய தலைமை செயலகம் அணியை 4 -3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழகம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #NationalHockey #Championship #TamilNadu
Next Story
×