என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
19 வயதில் ஷுப்மான் கில் செய்ததில் 10 சதவீதம் கூட நான் செய்ததில்லை: விராட் கோலி புகழாரம்
Byமாலை மலர்28 Jan 2019 5:10 PM IST (Updated: 28 Jan 2019 5:10 PM IST)
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் களம் இறங்க இருக்கும் ஷுப்மான கில்லுக்கு விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli
நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா தொடர், தற்போது மூன்று போட்டிகள் என தொடர்ச்சியாக விளையாடியதால் விராட் கோலிக்கு கடைசி இரண்டு ஒருநாள் போட்டியிலும், டி20 தொடரிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் 4-வது போட்டியில் இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வருவது குறித்து விராட் கோலி பதில் அளித்தார்.
அப்போது ஷுப்மான் கில்லுக்கு புகழாரம் சூட்டினார். ஷுப்மான் கில் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சில இளம் வீரர்கள் மிகவும் அபாரமான திறமையை பெற்றுள்ளனர். பிரித்வி ஷா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் இடம்பிடித்து விட்டார். ஷுப்மான் கில் மிகவும் அற்புதமான திறமையை பெற்றுள்ளார். வலைப்பயிற்சியின்போது அவரது ஆட்டத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன். நான் 19 வயதில் இருக்கும்போது ஷுப்மான கில் செய்ததில் 10 சதவீதம் கூட செய்ததில்லை.
அவர்கள் இந்திய அணிக்கு வருவது கிரிக்கெட்டிற்கு சிறப்பானது. சிறப்பான தகுதியுடன் இந்திய அணிக்கு வரும்போது, அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாலும், வளர்ச்சி வாய்ப்பு வழங்கப்படுவதாலும் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்’’ என்றார்.

Next Story
×