search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மோசமான பேட்டிங்: ரோகித் சர்மா வேதனை
    X

    மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மோசமான பேட்டிங்: ரோகித் சர்மா வேதனை

    ஹாமில்டனில் 92 ரன்னில் சுருண்டது, மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மோசமான பேட்டிங் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), ஷுப்மான் கில் (9), கேதர் ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) ஆகியோரை வீழ்த்த இந்தியா 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 92 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வியடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்களுடைய மோசமான பேட்டிங்கில் இதுவும் ஒன்று. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை நாம் பாராட்டியாக வேண்டும். இது அவர்களின் அற்புதமான முயற்சி.

    இந்தத் தோல்வியில் நாங்கள் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், அதேநேரத்தில் பந்து ஸ்விங் ஆகும்போது எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களை கடிந்து கொள்வது அவசியம். இந்த நேரத்தில் சிறந்ததை பற்றி நினைக்க வேண்டும். அதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் ஒருமுறை அதை பெற்றுவிட்டால், அது உங்களை எளிதாக்கிவிடும்.

    நாங்கள் சில மோசமான ஷாட்டுகள் அடித்து ஆட்டமிழந்து விட்டோம். பந்து ஸ்விங் ஆகும்போது எப்போதுமே சவால்தான். ஒருநாள் போட்டியில் ஏராளமான தொடர்களில் நாங்கள் அதிக அளவு ரன்கள் குவித்துள்ளோம். எங்கு தவறு செய்தோம் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். பந்து ஸ்விங் ஆனால், சற்று நேரம் கிடைக்கும். அதற்குள் பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சிந்திக்க வேண்டும்.

    நாட்டிற்காக விளையாடும்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சிறந்த அணி எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாட வேண்டும். இன்று நாங்கள் அனைத்துத் துறையிலும் சரியாக செயல்படவில்லை’’ என்றார்.
    Next Story
    ×