என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்த்-ஐ ஒப்பிடுவது சரியாகாது: ஷிகர் தவான்
Byமாலை மலர்11 March 2019 3:19 PM IST (Updated: 11 March 2019 3:19 PM IST)
எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்த்-ஐ ஒப்பிடுவது சரியாகாது என்று 143 ரன்கள் குவித்த இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். #INSvAUS #RishabhPant
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தவானின் அதிரடியால் (115 பந்தில் 143 ரன்கள்) 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது.
பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆஷ்டோன் டர்னர் 43 பந்தில் 84 ரன்களும், ஹேணட்ஸ்காம்ப் 105 பந்தில் 117 ரன்களும், கவாஜா 99 பந்தில் 91 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்து இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியாவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர் பணியில் ரிஷப் பந்த் அதிக அளவில் திணறினார். ஆட்டத்தின் பரபரப்பான நிலையில் டர்னரை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதை ரிஷப் பந்த் தவறவிட்டார். மேலும் சில ரன்அவுட் வாய்ப்பை வீணடித்தார்.
இதனால் ரசிகர்கள் மைதானத்தில் எம்எஸ் டோனி, எம்எஸ் டோனி என சத்தம் போட்டு ரிஷப் பந்தை கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் சதம் அடித்த ஷிகர் தவான் போட்டிக்குப் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘ரிஷப் பந்த்-ஐ எம்எஸ் டோனியுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story
×