என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட்டில் 35-வது அரைசதம்: ரோகித் சர்மாவை முந்திய தவான்
Byமாலை மலர்21 April 2019 12:54 PM IST (Updated: 21 April 2019 12:54 PM IST)
பஞ்சாப் அணிக்கெதிரான அரைசதம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார் தவான். #IPL2019
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்து டெல்லி அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது.
கிறிஸ் கெய்ல் 37 பந்தில் 69 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), மன்தீப் சிங் 27 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர். நேபாள நாட்டைச் சேர்ந்த சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும் ரபாடா, அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 49 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 41 பந்தில் 56 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். வில்ஜோன் 2 விக்கெட்டும், முகமது ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
டெல்லி அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பஞ்சாப் அணியிடம் மொகாலியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டது. இந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவை தவான் முந்தினார். அவர் 152 இன்னிங்சில் 35 அரை சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா 177இன்னிசில் 34 அரை சதம் அடித்துள்ளார்.
ஐபிஎல்-லில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் ரெய்னா, காம்பிர், விராட் கோலி (36) ஆகியோருக்கு அடுத்தப்படியாக தவான் உள்ளார். ஒட்டு மொத்த அளவில் வார்னே 41 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படி கோலி, ரெய்னா, காம்பிர் உள்ளனர்.

Next Story
×