என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா
Byமாலை மலர்17 Aug 2021 5:27 AM IST (Updated: 17 Aug 2021 5:27 AM IST)
இந்திய வீரர் திலீப் வெங்சர்கார் லார்ட்ஸ் மைதானத்தில் 1979, 1982, 1986 என 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
லண்டன்:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றிருந்தது.
1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நேற்று அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும்.
மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×