search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஷமி
    X
    முகமது ஷமி

    ஜடேஜா, ஷமி அபாரம்: இந்தியாவுக்கு 86 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஸ்காட்லாந்து

    ஸ்காட்லாந்து அணிக்கெதிராக இந்திய பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, முகமது ஷமி அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது.

    இந்நிலையில் இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் விளையாடி வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து டாஸ் தோற்ற விராட் கோலி இன்று டாஸ் வென்றார்.

    ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் முன்சே 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கைல் கோயேட்ஜர் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

    மிடில் ஆர்டர் ஓவரில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 17-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன்அவுட் உள்பட மூன்று விக்கெட்டுகளை ஸ்காட்லாந்து இழந்தது.

    ஜடேஜா

    பும்ரா அடுத்த ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மார்க் வாட் க்ளீன் போல்டாக ஸ்காட்லாந்து 17.4 ஓவரில் 85 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷமி 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×