search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    ரகானே - புஜாரா
    X
    ரகானே - புஜாரா

    ரோகித் தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிப்பு - ரகானே, புஜாரா நீக்கம்

    இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் துணை கேப்டனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

    ரோகித் தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மோசமான பேட்டிங் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரகானே மற்றும் புஜாரா இந்த டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் டி20 தொடரில் 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணை கேப்டன்), 3. மயங்க் அகர்வால் 4. பிரியங் பஞ்சல் 5. விராட் கோலி 6. ஷ்ரேயாஸ் அய்யர் 7. ஹனுமன் விஹாரி 8. சுப்மன் கில் 9. ரிஷ்ப் பண்ட் 10. அஸ்வின் 11. ஜடேஜா 12. ஜெய்ன்ட் யாதவ் 13. குல்தீப் யாதவ் 14. முகமது சமி 15. சிராஜ் 16. உமேஷ் யாதவ் 17. சவுரப் குமார் 18.கேஎஸ் பரத்
    Next Story
    ×