என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு (Sports)
X
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்: இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் விலகல்
Byமாலை மலர்13 May 2022 12:45 PM GMT (Updated: 13 May 2022 12:45 PM GMT)
மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி விளையாட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் வெளியேறினார்.
பெங்களூரு:
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்த மாதம் 23-ஆம் தேதி ஜகார்த்தாவில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய ஆடவர் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பயிற்சியின் போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் இந்த போட்டியில் இருந்து விலகியதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. ரூபிந்தருக்குப் பதிலாக இந்திய அணியை பீரேந்திர லக்ரா வழிநடத்துவார். துணை கேப்டனாக ஸ்டிரைக்கர் எஸ்.வி.சுனில் இருப்பார்.
இது குறித்து பயிற்சியாளர் பி.ஜே.கரியப்பா கூறுகையில், ரூபிந்தர் பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தினால் ஆசிய கோப்பை விளையாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை என்றார்.
‘பீரேந்திரா மற்றும் சுனில் அனுபவம் வாய்ந்தவர்கள். பல வருடமாக அணியில் இருக்கின்றார்கள். ரூபிந்தரை நாங்கள் தவறவிட்டாலும் எங்களிடம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும் பயிற்சியாளர் கூறினார்.
Next Story
×