search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன.
    • சென்னை, சன்ரைசர்ஸ், லக்னோ தலா ஆறு வெற்றிகள் பெற்றுள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

    இதனால் புள்ளிகள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இரண்டு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் (NRR) அடிப்படையில் கொல்கத்தா முதலிடம் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடம் பிடித்துள்ளது.

    5-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதுவரை 3-வது இடத்தில் இருந்து லக்னுா 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6-வது இடத்தில் உள்ளது. 10 அணிகள் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கவில்லை.

    • முகமது அமிர் 2010-ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சிறைத்தண்டனை பெற்றார்.
    • இதனால் அயர்லாந்து அவரது விசாவை தடை செய்தது.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவர் ஏற்கனவே அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அயர்லாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் இன்று காலை அயர்லாந்து புறப்பட்டனர்.

    ஆனால் முகமது அமிர் மட்டும் புறப்படவில்லை. முகமது அமிர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றார். அப்போது அயரலாந்து அவரது விசாவுக்கு தடைவிதித்திருந்தது. தற்போதும் அது நடைமுறையில் இருக்கிறது. இதனால் உடனடியாக விசா அவருக்கு கிடைக்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள் விசா கிடைத்துவிடும். அதன்பின் அணியுடன் முகமது அமிர் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2018-ம் ஆண்டும் இதுபோன்ற பிரச்சனை முகமது அமிருக்கு ஏற்பட்டது. பின்னர் விசா வழக்கப்பட்டது. பாகிஸ்தான்- அயர்லாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மே 10-ந்தேதி நடக்கிறது.

    2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முகமது அமிர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.

    வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
    • கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் - சால்ட் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ரன்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார். சுனில் நரைன், லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய 39 பந்துகளில் 81 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் அடித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - குல்கர்னி களமிறங்கினர். குல்கர்னி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய கேஎல் ராகுல் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 5 ரன்னிலும் அதிரடியாக விளையாடி ஸ்டோய்னிஸ் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா 3 விக்கெட்டுகளையும், ரஸல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம்.
    • இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசி அசத்திய சிமர்ஜித் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    "பிட்ச் ஸ்லோவாக இருந்ததை அனைவரும் நம்பினர். எனினும், பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம். பிறகு, துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த சமயத்தில் 160 முதல் 170 வரை அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம்."

    "சிமர்ஜித் சிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இதுவும் தாமதம் இல்லை. நாங்கள் இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம், ஆனால் சிமர்ஜித் சிங் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்பிக்கை இருந்தது," என்று தெரிவித்தார்.

    • கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 81 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் - சுனில் நரைன் களமிறங்கினர்.

    இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி நரைனுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் அரை சதம் விளாசினார். தொடர்ந்து ஆடிய நரேன் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த ரஸல் 12 ரன்னிலும் அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 ரன்னிலும் ரிங்கு சிங் 16 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஷ்ரேயாஸ் அய்யர் ரமன் தீப் சிங் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற டோனி சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். டோனி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் இருந்தார். தற்போது அதனை முறியடித்து ஜடேஜா (16 முறை) முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இவர்களுக்கு அடுத்தப்படியாக ரெய்னா 12 முறையும் ருதுராஜ் 11 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் டோனி முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்- ரகானே களமிறங்கினர்.

    இதில் ரகானே 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 32 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட்டும், ஷிவம் துபே கோல்டன் டக் அவுட் முறையில் ராகுல் சஹாரின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    அவர்களை தொடர்ந்து 30 ரன்களில் டேரில் மிட்செல்லும் அடுத்து வந்த மொயீன் அலி 17, சாண்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17 என விக்கெட்டை இழந்தனர். அந்த நேரத்தில் ரசிகர்கள் முழக்கத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் டோனி களமிறங்கினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் டோனி கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இதனால் மைதானமே சற்று அமைதியாக காட்சியளித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் டக் அவுட் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது.

    • கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எட்டியது. சென்னை சார்பில் கேப்டன் கெய்க்வாட் (32), டேரில் மிட்செல் (30) மற்றும் ரவீந்திர ஜடேஜா (43) சிறப்பாக ஆடினர்.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    168 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோசோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சஷான்க் சிங் 27 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஜிதேஷ் ஷர்மா கோல்டன் டக் ஆன நிலையில், அஷுடோஷ் ஷர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை சார்பில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது.
    • கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது.

    ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.

    • இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார்.
    • நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

    அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை.

    இந்நிலையில் தொடை தசையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள இலங்கை திரும்பி உள்ளார். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • சென்னை அணியில் துபே மற்றும் டோனி 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- ரகானே களமிறங்கினர். ரகானே 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டெரில் மிட்செல் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 32 ரன்னில் ருதுராஜ் அவுட் ஆனார். அடுத்து வந்த துபே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மொயின் அலி 17, சாட்னர் 11, ஷர்துல் தாகூர் 17, டோனி 0, என ஆட்டமிழந்தனர். இறுதி அதிரடி காட்டிய ஜடேஜா 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×