search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
    • எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • விராட் கோலி 500 ரன்கள் அடித்துள்ளார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் 509 ரன்கள் அடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 10 போட்டிகளில் 509 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைவசப்படுத்தியிருந்தார்.

    இந்த போட்டியில் 62 ரன் அடித்ததன் மூலம் 509 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை விராட் கோலியுடன் இருந்து பெற்றுள்ளார்.

    சாய் சுதர்சன் 418 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் 406 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை குவித்தார்.
    • பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    • பதிரனா லேசான காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
    • அவருக்குப் பதிலாக 36 வயதான ரிச்சார்ட் க்ளீசன் இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பதிரனா லேசான காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சென்னை அணியில் ரிச்சார்ட் க்ளீசன் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் ரிச்சார்ட் க்ளீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    இவருக்கு 36 வயது முடிவடைந்து 151 நாள் ஆகிறது. இதன்மூலம் 2014-ல் இருந்து மிகவும் அதிகமான வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக சிகந்தர ராசா 36 வயது 342 நாட்கள் ஆன நிலையில் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். இம்ரான் தாஹிர் 35 வயது 44 நாட்களில் அறிமுகம் ஆனார். ஜலாஜ் சக்சேனா 34 வயது 124 நாளில் அறிமுகம் ஆனார். கேஷப் மகாராஜ் 34 வயது 63 நாட்களில் அறிமுகம் ஆனார்.

    • சென்னை அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் சென்னை அணி ஒரே முறை தான் டாஸ் வென்றிருக்கிறது. டாஸ்-இல் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருந்தார்.

    டாஸ் வெற்றி பெற பயிற்சி எடுத்தும், சென்னை அணி இன்றைய போட்டியிலும் டாஸ்-இல் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக சென்னை அணி டாஸ்-இல் தோல்வியை தழுவி வருகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுகிறார்.
    • கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வாய்க்கு கிடைக்கவில்லை. ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஒருவேளை விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் ஜெய்ஸ்வால் ஆடும் லெவன் அணியில் இடம் பெறமாட்டார். ஒருவேளை காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக களம் இறக்க சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசிய விளையாட்டில் இவரது தலைமையில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 447 ரன்கள் குவித்துள்ளார்.

    இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக சுப்மன் கில்லை தேர்வு செய்தது முற்றிலும் பாரபட்சம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வாளருமான ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவினர் மீது சாடியுள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட்டை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் தேர்வானது எனக்கு குழப்பமாக உள்ளது. சுப்மன் கில் அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட சிறப்பாக உள்ளார்.

    சுப்மன் கில் தோல்வியடைந்த நிலையிலும், தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார். அவர் தேர்வாளர்களின் ஆதரவை பெறுள்ளார். இது மிகப்பெரிய பாரபட்சம்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.

    சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

    இந்நிலையில் டாஸில் வெற்றி பெற பயிற்சி செய்து வருவதாக எஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    டாஸ் குறித்து பேசிய அவர், "டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நீ வென்றாக வேண்டும். எனவே, அதற்கு பயிற்சி எடு என டோனி பாய் கூறினார். அப்போதில் இருந்து டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் பயிற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 பேர் கொண்ட அணியில் உறுதியாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
    • ரிசர்வ் வீரர்கள் நான்கு பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகனுக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ரிங்கு சிங் தந்தை கூறியதாவது:-

    ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என முழுமையாக நம்பியிருந்தோம். ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சம்பவத்தை கொண்டாட எங்கள் குடும்பத்தினர் ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால், ரிங்கு சிங் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்தான் இடம் பிடித்துள்ளார்.

    ரிங்கு சிங் அவரது அம்மாவிடம் போனில் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை எனத் தெரிவித்தார். அப்போது அவர் மனம் உடைந்துவிட்டார்.

    இவ்வாறு ரிங்கு சிங் தந்தை தெரிவித்துள்ளார்.

    கடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் இந்திய அணியில் இடம் பிடித்தார். குறிப்பாக டி20 அணியில் அதிரடியாக விளைாயடி முத்திரை படைத்தார். இதனால் நீண்ட காலம் டி20 இந்திய அணியில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிங்கு சிங் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    • நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார்.
    • அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் இருப்பார்கள் என்று கருதப்பட்ட சில வீரர்கள், சரியாக விளையாடாத காரணத்தினால் கழற்றி விடப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் சரியாக விளையாடாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்கு தகுதியானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 19.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 12.92. ஆனால் ஓவருக்கு 9 ரன் என சற்று கூடுதலாக ரன் கொடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார். நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்.

    அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் நான் அவர் குறித்து அதிகமாக நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார்" என்றார்.

    • பி.சி.சி.ஐ. 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியை அறிவித்துள்ளது
    • டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை ஏன் இப்போட்டியில் சேர்க்க வில்லை, தற்போது தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்து வீசியுள்ளார் என்ற ஆதங்கம் குறித்து இணைய தளத்தில் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்படாதது குறித்து பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்திய அணி அறிவிப்பின்போது எப்போதும் உற்சாகமாக இருக்கும். ஆனால், தமிழ் பெயர்கள் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன்.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையிலும் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லை.
    • தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இடம் கிடைத்தாலும் நிரந்தரமாக அணியில் விளையாடமாட்டார்.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு சலிப்பு தட்டி உள்ளூர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

    உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடருக்கான வீரர்கள் தேர்வின்போது, சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என குரல் வலுக்கும். ஆனால், பிசிசிஐ கண்டு கொள்வதில்லை. அதனைத் தொடர்ந்து விமர்சனங்கள் கிளம்பும். ஓரிரு நாட்களில் அது அடங்கி போகும்.

    தற்போது ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி வருகிறார். அவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 385 ரன்கள் விளாசியுள்ளார்.

    விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில்தான் நேற்று பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது.

    இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கும்.

    நேற்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம் பிடித்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிசிசிஐ பலமுறை நிராகரித்த போதிலும், பொறுமை காத்து தனது திறமையை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

    15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ரிஷப் பண்ட் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    29 வயதாகும் சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். இந்த 9 வருடத்தில் 25 போட்டிகளில் விளையாடி 1 அரைசதத்துடன் 374 ரன்கள் அடித்துள்ளார்.

    ×