search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்- உலக சாதனை படைத்த தீப்தி ஜீவன்ஜி
    X

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்- உலக சாதனை படைத்த தீப்தி ஜீவன்ஜி

    • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி 400 மீட்டர் டி20 பிரிவில் கலந்து கொண்டார்.

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

    இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    முன்னதாக, இதற்காக தகுதி சுற்றின்போது தீப்தி ஜீவன்ஜி பெண்கள் 400 மீட்டர் டி20 ஹீட் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஒரு புதிய ஆசிய சாதனையை 56.18 வினாடிகளில் எட்டி, 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்கு தகுதி பெற்றார்.

    தீப்தி ஜீவன்ஜி, கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பெண்களுக்கான 400 மீ டி20 போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×