search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அதிக கோல்கள்-  மீண்டும் Golden Boot வென்றார் எர்லிங் ஹாலண்ட்
    X

    அதிக கோல்கள்- மீண்டும் Golden Boot வென்றார் எர்லிங் ஹாலண்ட்

    • கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

    பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் வெற்றி மூலம் மென்செஸ்ட்டர் சிட் அணியும் 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

    இதனிடையே, பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து Golden Boot- ஐ வென்றுள்ளார் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட். இத்தொடரில் மொத்தம் 27 கோல் அடித்துள்ளார். கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×