search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கனடாவை 12-0 என வீழ்த்தியது இந்தியா
    X

    பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கனடாவை 12-0 என வீழ்த்தியது இந்தியா

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்து முன்னிலை.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 கோல்கள் அடித்தது.

    பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. இந்திய இளம் வீராங்கனைகள் கோல் கோலாக அடிக்க இந்தியா 12-0 என கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அன்னு 4, 6 மற்றும் 39-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்து அசத்தினார். திபி மோனிகா டோப்போ 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    மும்தாஜ் கான் 26, 51, 54 மற்றும் 60-வது நிமிடங்களில் என நான்கு கோல் அடித்தார். தீபிகா சோரங் 34, 50 மற்றும் 54-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்தார்.

    போட்டி தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அட்டாக்கிங் அணுகுமுறையை கையாண்டனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அன்னு கோல் அடித்தார். தொடர்ந்து அட்டாக்கிங் அணுமுறையில் விளையாடிய போதிலும் முதல் கால் பகுதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றது.

    3-வது காலிறுதி நேரத்திலும் 4 கோல்களும், அதன்பின் கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 4 கோல்களும் அடித்தனர். இதனால் 12-0 என வெற்றி பெற்றனர்.

    இந்திய வீராங்கனைகள் நாளை ஜெர்மனியை எதிர்கொள்கின்றனர்.

    Next Story
    ×