search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கால்பந்து ஜாம்பவான் பீலே ஐசியுவில் அனுமதி
    X

    கால்பந்து ஜாம்பவான் பீலே

    கால்பந்து ஜாம்பவான் பீலே ஐசியுவில் அனுமதி

    • கால்பந்து ஜாம்பவானான பீலே தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    • உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (81).

    1956ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளையாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்களையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார். உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். தனது அணிக்காக பீலே 643 கோல்களை அடித்து உள்ளார்.

    பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறிய கட்டி அகற்றப்பட்டது. இதன்பின், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது.

    இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா என்ற பகுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் தொடர்ந்து இருந்து வந்தது.

    இந்நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பீலே அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×