search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • முதல் பாதியில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் பிரான்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 44 -வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஒலிவியர் கிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 74-வது நிமிடத்திலும், 91வது நிமிடத்திலும் பிரான்சின் கைலியன் மபாபே தலா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி கட்டமான 99-வது நிமிடத்தில் போலந்தின் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

    • உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார்.
    • அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.

    தோகா:

    கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.

    கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார்.

    உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.

    • முதல் பாதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

    • நாக் அவுட் சுற்றில் 16 நாடுகள் விளையாடுகின்றன.
    • இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

    நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

    இதேபோல், சி பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, டி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா, பெல்ஜியம், கனடா கேமரூன், செர்பியா, உருகுவே, கானா ஆகிய நாடுகள் வெளியேறின என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது.
    • ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செர்டான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக 26-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். தொடர்ந்து 35-வது நிமிடத்தில் செர்பியாவின் டுசான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

    முதல் பாதியின் கடைசி கட்டத்தில் 44-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரில் எம்போலோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரெமோ புருலெர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், சுவிட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததால் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. செர்பியா அணி தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் கேமரூன் அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் பிரேசில், கேமரூன் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதி. இதில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபுபெக்கர் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. 

    பிரேசில் அணி தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • முதல் பாதியில் உருகுவே அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது.
    • உருகுவே வீரர் ஜார்ஜியன் அடுத்தடுத்து 2 கோல் அடித்தார்.

    கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் இன்று இரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கானா, உருகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 26 நிமிடத்தில் உருகுவே வீரர் ஜார்ஜியன் அரராஸ்கேட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    தொடர்ந்து 32 நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்திய உருகுவே வெற்றி பெற்றது. எனினும் ஹெச் பிரிவில் அடுத்த சுற்றுக்கு கோல்கள் அடிப்படையில் தென்கொரியா 2வது அணியாக முன்னேறியதால்,  கானாவும், உருகுவேயும் போட்டியில் இருந்து வெளியேறின.

    • முதல் பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.
    • கூடுதல் நேர ஆட்டத்தில் தென்கொரிய வீரர் 2வது கோல் அடித்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஹெச் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென் கொரியா, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ ஹோர்டா கோல் அடித்தார். 27 நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் யங் வோன் பதில் கோல் அடித்ததால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 91வது நிமிடத்தில் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்றது. அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய போட்டிகளின் முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.
    • இரண்டாவது சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

    நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்) ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இன்றைய போட்டி முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.

    'எச்' பிரிவில் உள்ள தென்கொரியா இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் கானா-உருகுவே அணிகள் மோதுகின்றன.

    இதில் போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. மற்ற அணிகள் வெற்றி கட்டாயத்தில் உள்ளன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டங்களில் 'ஜி' பிரிவில் செர்பியா-சுவிட்சர்லாந்து அணிகளும், பிரேசில்-கேமரூன் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்று விட்ட நிலையில் மற்ற அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி , கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெறும்.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து-'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா (இரவு 8.30), 'சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா-'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிகள் வெளியேற்றப்படும்.

    • முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஜெர்மனி, கோஸ்டா ரிகா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். 70-வது நிமிடத்தில் மானுவல் நியூர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது. போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்ததால் தொடரில் இருந்து ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறின.

    • முதல் பாதியில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஜப்பான், ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைபடுத்தினார். இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பானின் ரிட்சு டான் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். மற்றொரு வீரர் டனகா 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

    ஸ்பெயின் அணி தோல்வி அடைந்தாலும் கோல்கள் அதிகமாக அடித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • குருப்-எப் பிரிவில் மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    • கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், குரூப்-எப் பிரிவில் உள்ள கனடா, மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி, 4வது நிமிடம் மற்றும் 23வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோல்களை ஹக்கிம் ஜியேச், யூசப் யென்-நெசிரி அடித்தனர். அதன்பின்னர் 40வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் கனடா வீரர் நயீப் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் மொராக்கோ அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கனடா வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்சம் ஆட்டத்தை சமன் செய்துவிட வேண்டும் என்றும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சியை மொராக்கோ வீரர்கள் முறியடித்தனர். அதேசமயம் அவர்களும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில் 2-1 என மொராக்கோ அணி வெற்றி பெற்றது. அத்துடன், குருப்-எப் பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.

    குரூப்-எப் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா, பெல்ஜியம் அணிகள் விளையாடின. இப்போட்டியின் இறுதி வரை இருஅணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கோல் இன்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 புள்ளிகளுடன் குரோஷியா அணி நாக் அவுட் சுற்றை உறுதி செய்தது.

    ×