என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி- 27 பதக்கங்களுடன் 3ம் இடம் பிடித்து இந்தியா அசத்தல்
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் வென்றது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட வீரர்களில், தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர்.
மூன்றாம் நாளான நேற்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.
4ம் நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல், பல்வேறு போட்டிகளிலும் இந்தியா சார்பில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்திய அணி அசத்தலாக வெற்றிப் பெற்றுள்ளது.