search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார்.
    • சீன வீரர் முதல் இடமும், உக்ரைன் வீரர் 2-வது இடமும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் (50m Rifle 3 Positions) பிரிவின் இறுதிப் போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.

    இவர்களுக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.

    சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள்.
    • துப்பாக்கி சுடுதலில் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியது.

    இந்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

    51 வயதான யூசுப், துல்லியமான பார்க்கக்கூடிய கண் கண்ணாடி மற்றும் சத்தம் கேட்காமல் இருக்க கூடிய கருவிகள் எதுவும் அணியாமல் போட்டியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    சாதாரணமான கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்து கொண்டு பல வீரர்களை தோற்கடித்து வெள்ளி பதக்கத்தை அவர் வென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கண்கள் கூசாமல் இருப்பதற்கும் ஒரு கண்ணின் பார்வையை தடுக்கும் விதமாகவும் துல்லியமான சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்மிண்டன் Round of 16 சுற்றில் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
    • இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் Round of 16 சுற்றில் இந்திய வீரர்கள் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர். இப்போட்டி இன்று மாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் வெற்றி பெறும் ஒருவர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    • பிரியங்கா (பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), பகல் 12.50 மணி.
    • இந்தியா- பெல்ஜியம் (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், பிற்பகல் 1 30 மணி.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 7-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    தடகளம்:

    பரம்ஜித் சிங், அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங் (ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), காலை 11 மணி. பிரியங்கா (பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), பகல் 12.50 மணி.

    கோல்ப்:

    ககன்ஜீத் புல்லார், ஷூபாங்கர் ஷர்மா (ஆண்கள் தனிநபர் முதல் சுற்று), பகல் 12 30 மணி.

    துப்பாக்கி சுடுதல்:-

    ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை இறுதிப்போட்டி), பகல் 1 மணி. சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மோட்கில், (பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று), மாலை 3 30 மணி.

    ஆக்கி:

    இந்தியா- பெல்ஜியம் (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், பிற்பகல் 1 30 மணி.

    குத்துச்சண்டை:

    நிகாத் ஜரீன் (இந்தியா)- வு யு (சீனா), (பெண்கள் 50 கிலோ எடைபிரிவு 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    வில்வித்தை:

    பிரவீன் ஜாதவ் (இந்தியா)- காவ் வெஞ்சாவ் (சீனா), (ஆண்கள் தனிநபர் பிரிவு), பிற்பகல் 2.31 மணி.

    பாய்மரப்படகு:

    விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி), மாலை 3.45 மணி. நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி), இரவு 7.05 மணி.

    • பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி வீரர்களுக்கு இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.
    • எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பி கமிட்டி இதை செய்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 160 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் உடலுறவு கொள்வார்கள். இதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர் வீராங்கனைகள் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அப்போது வீரர்களுக்கு காண்டம் வழங்குவதை ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்தது.

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதால் வீரர் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 2,30,000 காண்டம்களை ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. அதில் 2 லட்சம் ஆணுறைகளும், 20 ஆயிரம் பெண்ணுறைகளும் 10 ஆயிரம் ஓரல் காண்டம்களும் அடங்கும்.

    வீரர்கள் வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் காண்டம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    • பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
    • குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஜப்பான் வீராங்கனை மியூ ஹிரானோ உடன் மோதினார். இதில் பத்ரா 1-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    மியூ ஹிரானோ ஒலிம்பிக் மற்றும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் அல்காரஸ் ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் கோப்பெர் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் அல்காரஸ் ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.
    • பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.

    பாரீஸ்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.

    • ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்று இன்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பெண்கள் குத்துசண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், நார்வே வீராங்கனைஹோப்ஸ்டெட் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம் லவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

    • பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
    • இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். அதேபோல்,

    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, சிங்கப்பூர் வீராங்கனை செங் ஜியானுடன் மோதினார். இதில் அகுளா 4-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    • மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார்.

    பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ 3பி தகுதிச் சுற்றில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ஸ்வப்னில் குசேலே ஆகியோர் கலந்து கொண்டனர். தகுதிச் சுற்றில் முதல் எட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.

    அந்த வகையில் குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.

    சீனாவின் லியு யுகுன் மொத்தம் 594 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், நார்வேயின் ஜான்-ஹெர்மன் ஹெக் 593 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்,

    3 முதல் 6 இடங்கள் முறையே செர்ஹி குலிஷ் 592 புள்ளி (உக்ரைன்), லுகாஸ் 592-35x புள்ளி (பிரான்சிஸ்), லாசர் கோவாசெவிக் 592-33x புள்ளி (செர்பியா), டோமாஸ் பார்ட்னிக் 590-40x புள்ளி (பொலந்து) ஜிரி பிரிவ்ராட்ஸ்கி 590-35x புள்ளி (செக் குடியரசு). 7-வது இடத்தில் தோமர் உள்ளார்.

    • இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

    தொடக்கத்தில் 2-8 என பின்தங்கிய லக்ஷயா சென், அதிரடியாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

    இறுதியில், லக்ஷயா சென் 21-18, 21-12 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    ×