search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய கேப்டனின் கடைசி நிமிட கோல்- அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டம் டிரா- வீடியோ
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய கேப்டனின் கடைசி நிமிட கோல்- அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டம் டிரா- வீடியோ

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
    • போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடித்தார்.

    2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தமாக 12 அணிகள் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் இரு அணி வீரர்களும் திணறினர்.

    இந்த நிலையில் போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடிக்க அதனை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அர்ஜென்டினா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதனையடுத்து இந்திய அணி கடுமையாக போராடியும் முதல் பாதியில் அர்ஜென்டினாவால் கூட சமன் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதனை அந்த அணி கோலாக மாற்ற தவறியது. இதனை அடுத்து கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஸ் மாற்றப்பட்டார். இது இந்தியா எடுத்த தைரியமான முடிவாக பார்க்கப்பட்டது. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவ போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    இதனை அவர் கோலாக மாற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. பி பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களிலும் ஏ பிரிவில் நெதர்லாந்து பிரிட்டன் அணி முதல் இரண்டு இடங்களிலும் இருந்தது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×