search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    Olympics Hockey
    X

    ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

    • ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
    • இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

    துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.

    இதனால் போட்டி விறுவிறுப்பானது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

    இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர். இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது.

    இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜெர்மனி அணி ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

    Next Story
    ×