search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    100-மீ தடை தாண்டும் ஓட்டம்: அரையிறுதி வாய்ப்பை இழந்த ஜோதி யார்ராஜி
    X

    100-மீ தடை தாண்டும் ஓட்டம்: அரையிறுதி வாய்ப்பை இழந்த ஜோதி யார்ராஜி

    • இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
    • இதனால் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 67-வது இடத்தில் உள்ளது.

    பாரிஸ் ஒலிம்பிக் 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரானது வரும் 11-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 67-வது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற மகளிருக்கான 100மீ தடை ஓட்டப் போட்டியில் 2-வது வாய்ப்பில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 4-வது இடம் பிடித்து அரையிறுதி போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஏற்கனவே முதல் சுற்றான ஹீட் பிரிவில் 7-வது இடம் பிடித்த நிலையில், அடுத்து சுற்றுக்கு முன்னேற கிடைத்த 2-வது வாய்ப்பில் 13.17 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

    இதற்கு முன்னதாக ஆண்களுக்கான 3000-மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தடகள வீரர் அபினாஷ் சேபிள் ஹீட் போட்டியில் 5-வது இடம் பிடித்திருந்த நிலையில் இறுதிப் போட்டியில் 8:14:18 வினாடிகளில் இலக்கை கடந்து 11-வது இடம் பிடித்து வெளியேறினார். இந்த தொடரில் தோல்வி அடைந்து அவர் வெளியேறியிருந்தாலும், வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவினாஷ் சேபிள் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×