search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தோனேசியா ஓபன்: முதல் சுற்றிலேயே பிவி சிந்து தோல்வி
    X

    இந்தோனேசியா ஓபன்: முதல் சுற்றிலேயே பிவி சிந்து தோல்வி

    • 15-21, 21-15, 14-21 என தோல்வியை சந்தித்தார்.
    • வென்-சிக்கு எதிராக முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து சீன தைபே வீராங்கனை வென்-சியை எதிர்கொண்டார்.

    இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து சீன தைபே வீராங்கனை ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

    முதல் கேம்-ஐ 15-21 என இழந்தார். ஆனால் 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி கேம்-ல் பிவி சிந்து 14-21 என தோல்வியடைந்தார். இதனால் 1-2 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    வென்-சிக்கு எதிராக முதன்முறையாக பிவி சிந்து தோல்வியை சந்தித்துள்ளார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான ரூட்டாபர்னா பண்டா- ஸ்வேதாபர்னா பண்டா கொரிய ஜோடியிடம் 12-21, 9-21 எனத்தோல்வியை சந்தித்தது.

    Next Story
    ×