என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
போர்ச்சுக்கலுடன் இன்று கால் இறுதியில் மோதல்- மொராக்கோ புதிய சாதனை படைக்குமா?
- மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
- ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.
தோகா:
உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
போர்ச்சுக்கல் அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவையும், 2-0 என்ற கணக்கில் உருகுவேயையும் தோற்கடித்து இருந்தது. தென் கொரியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
போர்ச்சுக்கல் 12 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான 2-வது சுற்றில் அந்த வீரர்கள் அபாரமாக ஆடினார்கள்.ரொனால்டோ இடத்தில் இடம் பெற்ற ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். புருனோ பெர்னாண்டஸ், பெப்பே , ரபெல் லியோ போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
மொராக்கோ முதல் முறையாக உலக கோப்பை அரைஇறுதிக்கு நுழைந்து புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.
மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. லீக் சுற்றில் பெல்ஜியம்(2-0), கனடா (2-1 ) அணிகளை வீழ்த்தி இருந்தது. குரோஷியாவுடன் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தது. 2-வது ரவுண்டில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.
போர்ச்சுக்கல் அணிக்கு எல்லா வகையிலும் மொரோக்கோ சவால் கொடுக்கும். இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும்.
இரு அணிகள் 2 முறை முறை மோதியுள்ளன. இதில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.
அல்கோரில் உள்ள அல்பயத் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும்.
பிரான்ஸ் 7-வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க்கை ( 2-1 ) வீழ்த்தி இருந்தது. துனிசியாவிடம் (0-1) தோற்றது. 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை தோற்கடித்தது.
பிரான்ஸ் அணியில் எம்பாப்வே (5 கோல்), ஆலிவர் ஜிரவுட் ( 3 கோல்) , ரேபியாட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணி 4-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.
அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஈரான் ( 6-2 ) , வேல்சை (3-0) வீழ்த்தியது. அமெரிக்காவுடன் (0-0 ) டிரா செய்தது. 2-வது சுற்றில் செனகலை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரிகேன் , ராஷ்போர்ட், ஷகா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய போட்டிகளில் பிரான்ஸ் 9-ல், இங்கிலாந்து 17-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் 'டிரா' ஆனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்