search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒரு கோல் அடிப்பது எளிதல்ல...  ஓய்வுபெற்ற சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து
    X

    ஒரு கோல் அடிப்பது எளிதல்ல... ஓய்வுபெற்ற சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து

    • இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சுனில்.
    • நீங்கள் இந்தியாவின் கொடியை உயர்த்தியுள்ளீர்கள்.

    இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இருந்து சுனில் சேத்ரி விடைபெற்றார். நேற்று நடைபெற்ற குவைத்துக்கு எதிரான போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது சுனில் சேத்ரி கண்ணீருடன் வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

    முன்னதாக மைதானத்தை சுற்றி சுனில் சேத்ரிக்கு நன்றி தெரிவித்து பேனர்கள், பாதகைகளை ரசிகர்கள் ஏந்தி இருந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


    இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சுனில். 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும் 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரர் சுனில் சேத்ரி ஆவார்.

    இந்நிலையில், ஓய்வு பெற்ற கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒரு கோல் அடிப்பது எளிதல்ல, சர்வதேச போட்டிகளில் ஒற்றை ஆளாக 94 கோல்கள் அடித்துள்ளார். நீங்கள் இந்தியாவின் கொடியை உயர்த்தியுள்ளீர்கள். உங்களின் மறக்க முடியாத கால்பந்து பயணத்திற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    Next Story
    ×