search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.
    • சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.

    இதில், 7-5, 6-3, 6-7 (6/8), 6-7 (5/7), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி ஆண்ட்ரே ரூப் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் ஆண்ட்ரே ரூப்லெவ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், இத்தாலியின் எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை நேர் செட்களில் வென்றுள்ளார்.

    சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் பெரெட்டினி, ஜெர்மனி வீரர் ஸ்வரேவை தோற்கடித்தார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.

    இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
    • 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), 8-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 2-வது சுற்று ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

    உலகின் முதல் நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து) 3-வது சுற்றில் குரோஷியாவை சேர்ந்த 30-வது வரிசையில் உள்ள பெட்ரா மேட்ரிச்சை எதிர்கொண்டார். இதில் ஸ்வியா டெக் 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலிசா பெட்டாவை வீழ்த்தினார். விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்), சுவிட்டோலினா (உக்ரைன்), ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 32-ம் நிலை வீராங்கனை மரியா பவுஸ்கோவா (செக் குடியரசு) 7-6, (7-4), 4-6, 7-5 என்ற கணக்கில் கார்சியாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்)-அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாலை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சின் கார்சியா 3-6, 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் கனடாவின் பெர்னான்டசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து), வெக்கிச் (குரோஷியா), லினெட் (போலந்து) பொடா போலா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார். அதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் தியாபோ (பிரான்ஸ்), பெல்லா (அர்ஜென்டினா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), லாஸ்லோ டிஜெரே (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெனர்டென்சை தோற்கடித்தார்.
    • விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் போடோரோஸ்கோவை வீழ்த்தினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் உக்ரைன் எலினா ஸ்விடோலினோ எலிஸ் மெர்டென்சுடன் மோதினார்.

    எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெனர்டென்சை தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனை சேர்ந்த ஜூலி நீமைர் 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டி வரை சென்றவரான கரோலினா முச்சோவை தோற்கடித்தார்.

    இதேபோல், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் போடோரோஸ்கோவை வீழ்த்தினார்.

    • ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாம்சனை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-5, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மேனை தோற்கடித்தார்.

    பெண்கள் பிரிவில் முதல் வரிசையில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலாந்து) 2-வது சுற்றில் சாரா டோராமாவை (ஸ்பெ யின்) எதிர் கொண்டார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறும் இடத்தில் தியானத்திற்கான அறை உள்ளது
    • தியான அறைக்கு ரசிகர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என நிர்வாகம் வேண்டுகோள்

    இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஒன்று. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு.

    விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் (கோர்ட் என அழைக்கப்படும்) நடைபெறும். கோர்ட் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன.

    கடந்த வருடம் 12-வது கோர்ட் அருகே உள்ள அறையில் ஒரு ஜோடி உடலுறவு கொண்டதாகவும், ரசிகர்கள் முகம் சுழித்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விம்பிள்டன் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.

    பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான இடத்தில் இப்படி செய்யலாமா?, அந்த இடத்தை ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வாய்ப்பாக அந்த இடம் உள்ளது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதை எதிர் பார்க்கிறோம். அந்த இடத்திற்கான மதிப்பை ரசிகர்கள் வழங்க வேண்டும்'' என இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பு நிர்வாக தலைவர் சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

    ''ஒரு ஜோடி அறையில் இருந்து மிகப்பெரிய புன்னகையுடன் வந்ததாகவும், பெண் கோடைக்கால ஆடை அணிந்திருந்ததாகவும், உள்ளே வேறு என்ன நடந்திருக்கும்'' என ரசிகர் ஒருவர் புகார் கூறியதாகவும், மற்றொரு ரசிகர் ''நெருக்கமாக இருக்கும்போது வெளிப்படும் சத்தம்'' கேட்டதாகவும் புகார் அளித்ததாக சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

    அந்த அறையில் சேர், மடிக்கக் கூடிய மேஜை, சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளன.

    • சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், சீனாவின் லின் ஜூவும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மழை குறுக்கிட்டடால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. அதன்பின் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.

    இறுதியில், இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் யு யுவானைச் சந்தித்தார்.

    இதில் அசரென்கா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
    • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டினா வீரரை வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் லாரண்ட் லொகோலியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார்.
    • கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன்.

    டென்னிஸ் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி. டென்மார்க்கை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். கடந்த 2020-ம் ஆண்டு தனது 29-வது வயதில் வோஸ்னியாக்கி, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இவர் முன்னாள் கூடைப்பந்து வீரர் டேவிட் லீயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன். நான் இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். ஆனால் நான் இன்னும் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளது.

     நான் மீண்டும் விளையாட வருகிறேன். அமெரிக்க ஓபனில் விளையாட உள்ளேன். என்னால் கிராண்ட்சிலாம் பட்டங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன் என்றார்.

    ×