search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜெர்மனி வீரர் முதல் மற்றும் 3-வது செட்டை கைப்பற்றினார்
    • 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார் சிட்சிபாஸ்

    ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேனை எதிர்கொண்டார். முதல் சுற்றை 4-6 என சிட்சிபாஸ் இழந்த போதிலும், 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ஹான்ப்மேன் அபாரமாக விளையாடினார். அவருக்கு சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் 2-6 என எளிதில் 3-வது செட்டில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    யானிக் ஹான்ப்மேன் 6-4, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • முதல் செட்டை 6-3 என பூப்ளிக் கைப்பற்றினார்.
    • இரண்டாவது செட்டில் ரூப்லேவ் பதிலடி கொடுத்து 6-3 என கைப்பற்றினார்.

    ஜெர்மனியில் ஆண்களுக்கான ஏடிபி ஹாலே டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3-ம் நிலை வீரரான ரூப்லேவ்-ஐ கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பூப்ளிக் எதிர்கொண்டார்.

    இவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ வீழ்த்தி இருந்ததால் இறுதிப் போட்டியில் கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தனது திறமையான சர்வீஸ் மூலம் ரூப்லேவ்-ஐ திணறடித்தார்.

    முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். ஆனால் அனுபவம் வாய்ந்த ரூப்லேவ் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்து 6-3 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தினர்.

    ஆனால் மூன்றாவது செட்டிலும் பூப்ளிக் ஆதிக்கம் செலுத்த அந்த செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

    இதன் மூலம் ரூப்லேவ்-ஐ 6-3, 3-6, 6-3 என வீழ்த்தி பூப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    • முதல் செட்டை 3-6 என ஸ்வெரேவ் இழந்தார்
    • 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 5-7 என இழந்து தோல்வி

    ஜெர்மனியின் ஹாலே நகரில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 9-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- தரநிலை பெறாத கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்-ஐ எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வெரேவ் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    முதல் செட்டை கஜகஜஸ்தானின் 26 வயதான பப்லிக் 6-3 என எளிதில் வென்றார். 220 கி.மீட்டர் வேகத்தில் பப்லிக் சர்வீஸ் செய்ய ஸ்வெரேவ் மிரண்டு போனார். இதனால் தொடக்கத்தில் 4-1 என பின்தங்கினார். இது முதல் செட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

    2-வது செட்டில் இருவரும் 5-5 என சமநிலையில் இருக்கும்போது, அடுத்த இரண்டு கேம்களையும் கைப்பற்றி 7-5 என வெற்றி பெற்றார்.

    அலெக்சாண்டர் பப்லிக் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீரரான ருப்லேவ்-ஐ எதிர்கொள்கிறார்.

    • அவரை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் குடெர்மெடோவா தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
    • இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

    ஜெர்மன் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி பெர்லின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) அதிர்ச்சி அடைந்தார்

    அவரை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் குடெர்மெடோவா தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. அலெக்சாண்ட்ரோவா (ரஷியா)-குடெர்மெடோவா (ரஷியா), கார்சியா (பிரான்ஸ்)-குவிட்டோவா (செக் குடியரசு), சக்காரி (கிரீஸ்)-வோண்ட்ரூசோவா (செக்குடியரசு), எலினா அவனேசியன் (ரஷியா)-டோனா வெக்கிச் (குரேஷியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

    • 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
    • கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    லண்டன்:

    எஸ்தோனியா நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் தற்போது தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறியுள்ள அவர் இதுவரை 6 பட்டங்களை வென்றுள்ளார். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.

    இந்த நிலையில் 27 வயதான கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முதுகுதண்டுவட பாதிப்பால் அடிக்கடி அவதிப்படும் அவர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே டென்னிசுக்கு முழுக்கு போடுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
    • 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) இந்த 2 பட்டத்தையும் கைப்பற்றினார்.

    பெண்கள் ஒன்றையர் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஸ்வியாடோக் (போலாந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியின் பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த முறை வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு தலா ரூ.24.41 கோடி கிடைக்கும். முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் தலா ரூ.57 லட்சம் பெறவார்கள். 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

    எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடால் கூறியதாவது:-

    இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள்.

    23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும். ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

    இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    • நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதுகிறார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும்.

    ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3-வது முறையாக வென்றார். ஒட்டுமொத்தமாக 4-வது கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை முச்சோவா போராடி 7-5 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றிய இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

    • காலிறுதிச்சுற்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரெவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    ×