search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார்.
    • ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பாரீஸ்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஸ்பெயின் வீரர் பெர்னபே ஜபாடாவுடன் மோதினார்.

    இதில் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் வென்று சிட்சிபாஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜான் லெனார்ட் ஸ்டர்ப், அர்ஜென்டினா வீரர் பெடொ காசினுடன் மோதினார். இதில் ஸ்டர்ப் 7-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷிய வீரர் கச்சனோவ் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரினா சபலென்கா அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

    • பார்சிலோனா ஓபனில் இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் சிட்சிபாசை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார்.

    இதில் கார்லோஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    • இரண்டாவது அரையிறுதியில் அல்காரஸ் இங்கிலாந்து வீரரை வென்றார்.
    • நாளை இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் சிட்சிபாசுடன் அல்காரஸ் மோதுகிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் டான் ஈவன்சுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.

    • முதல் அரையிறுதியில் சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்றார்.
    • நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பின் முசெட்டி 7-5 என

    கைப்பற்றினார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இரவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மெக்சிகோவின் சாண்டியாகோ - பிரான்சின் வாசலின் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • முதல் காலிறுதியில் சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரரை எதிர்கொள்கிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற இருந்த இரண்டாவது காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக விலகியதால், சக நாட்டு வீரர் லாரன்சோ முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதனால் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியை சிட்சிபாஸ் மோதுகிறார்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
    • இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    மான்டே கார்லோ:

    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை சந்தித்தார்.

    இதில் ரூனே முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஆந்த்ரே ரூப்லெவ் 5-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    • அரையிறுதி போட்டியில் ருனே 1-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 10-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை எதிர்கொண்டார்.

    இதில் சரிவில் இருந்து மீண்டு வந்த ஆந்த்ரே ரூப்லெவ் 5-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மழையால் தடைபட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 7 நிமிடம் அரங்கேறியது.

    மற்றொரு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவுடன் மோதினார். இந்த போட்டியில் ருனே 1-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ரூப்லெவ், ருனேவுடன் மோதுகிறார்.

    • இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.
    • 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

    பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிசில் ஆசிய- ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டங்கள் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் போராடி வீழ்ந்தது.

    ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் டாபின் கிம்மிடம் வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போசெல்-அங்கிதா ரெய்னா இணை 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் ஜி ஹீ சோய்-டாபின் கிம் ஜோடியிடம் தோல்வியை தழுவியது. 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் வென்றார்.

    மான்டே கார்லோ:

    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சை சந்தித்தார்.

    இதில் ரூப்லெவ் 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது.
    • ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

    ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி முதலே காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், இந்தப் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    அவர் ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் காயம் காரணமாக விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×