search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெள்ளிப் பதக்கம் பறிபோனது குறித்து வினேஷ் போகத்  ஆதங்கம்.. வைரலாகும் பதிவு
    X

    வெள்ளிப் பதக்கம் பறிபோனது குறித்து வினேஷ் போகத் ஆதங்கம்.. வைரலாகும் பதிவு

    • வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.
    • இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பதக்கம் நிராகரிக்கப்பட்ட பின் வினேஷ் போகத் முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் வினேஷ். தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் அவரது படம் அது. வேறு எந்த குறிப்புகள் அன்றி, இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் வினேஷ் போகத். வேறு எந்த வார்த்தைகளும் அந்த படத்திற்கு மேல் வினேஷ் போகத்துக்கு தேவையும் பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

    Next Story
    ×