search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கைப்பந்து லீக் போட்டி: 3-வது வெற்றி ஆர்வத்தில் டெல்லி, கோழிக்கோடு
    X

    கைப்பந்து லீக் போட்டி: 3-வது வெற்றி ஆர்வத்தில் டெல்லி, கோழிக்கோடு

    • சூப்பர் 5 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகிறது.
    • 2-வது ஆட்டத்தில் மும்பை, அகமதாபாத்துடன் இன்று பலப்பரிட்சை நடத்துகிறது.

    சென்னை:

    3-வது பிரைம் கைப்பந்து 'லீக்' போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'சூப்பர் 5' சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூபான்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றன.

    'சூப்பர் 5' சுற்று கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதின. இதில் பெங்களூரு 15-13, 16-14, 15-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு கிடைத்த 2-வது வெற்றியாகும்.

    இதன் மூலம் பெங்களூரு கடைசி இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை அணிக்கு கிடைத்த 2-வது தோல்வியாகும். அந்த அணி 4-வது இடத்தில் உள்ளது.

    'சூப்பர் 5' சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. டெல்லி அணி 3-வது வெற்றியுடன் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோழிக்கோடு-நடப்பு சாம்பியன் அகமதாபாத் அணிகள் மோதுகின்றன.

    கோழிக்கோடு அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு, மும்பையை வீழ்த்தி இருந்தது. டெல்லியிடம் தோற்றது. அந்த அணி அகமதாபாத்தை தோற்கடித்து 3-வது வெற்றியுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அகமதாபாத் 1 வெற்றி, 2 தோல்வியுடன் இருக்கிறது. வெற்றிக்கான கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

    'சூப்பர் 5' சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றில் விளையாடும்-முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும்.

    Next Story
    ×