search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    உலகக்கோப்பை ஜூனியர் மகளிர் கால்பந்து இன்று தொடக்கம்: இந்தியா - அமெரிக்கா மோதல்
    X

    உலகக்கோப்பை ஜூனியர் மகளிர் கால்பந்து இன்று தொடக்கம்: இந்தியா - அமெரிக்கா மோதல்

    • இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
    • 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பையை வட கொரியா அதிக பட்சமாக 2 முறை கைப்பற்றி இருக்கிறது.

    புவனேஷ்வர்:

    17 வயதுக்குட்பட்டவருக்கான (ஜூனியர்) உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

    இதுவரை 6 போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. 7-வது போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

    17 வயதுக்குட்பட்ட வருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. 30-ந் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியை நடத்தும் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிரேசில், மொராக்கோ, அமெரிக்கா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. புவனேஷ்வர் கலிங்கா மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

    ஆஸ்டம் ஒரியன் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்துவது சவாலானதாகும்.

    இந்திய பெண்கள் கால்பந்து அணி ஜூனியர் உலகக்கோப்பையில் ஆடுவது இதுவே முதல் முறையாகும். போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

    இன்றைய தொடக்க நாளில் நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பிரேசில்-மொராக்கோ (மாலை 4.30 மணி), 'பி' பிரிவில் உள்ள சிலிட் நியூசிலாந்து (மாலை 4.30), ஜெர்மனி-நைஜீரியா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 'பி' பிரிவு போட்டிகள் கோவாவில் நடக்கிறது.

    17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பையை வட கொரியா அதிக பட்சமாக 2 முறை கைப்பற்றி இருக்கிறது. தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் ஆகியவை தலா 1 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    Next Story
    ×