என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
உடன்குடி-நெல்லை இடையே 10-வது நாளாக போக்குவரத்து தடை: 100 கிராமமக்கள் கடும் பாதிப்பு
- பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.
- பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லை செல்லும் போக்குவரத்து பாதை மிகவும் முக்கியமான போக்குவரத்து நிறைந்த பாதையாகும்.
இந்தப் பாதையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது. உடன்குடியில் இருந்து தினசரி 20 முறை நெல்லைக்கு பஸ் சென்றது. தற்போது ஏற்பட்டு கனமழை காரணமாக செட்டியாபத்து, லட்சுமிபுரம், மருதூர் கரை, நாசரேத் மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னும் வெள்ளம் வடியவில்லை.
பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி- நெல்லை இடையே போக்குவரத்து இன்று 10-வது நாளாக தொடங்கவில்லை.
இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.
இந்தப் பாதையை உடனடியாக சரி செய்து உடன்குடி -நெல்லைக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.