search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நிறைவேறிய 13 தீர்மானங்கள்
    X

    மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நிறைவேறிய 13 தீர்மானங்கள்

    • மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
    • தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுகின்றவர் திருமாவளவன்.

    தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

    இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.



    இந்த மாநாட்டில் அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மாநாட்டில் ரவிக்குமார் எம்.பி. பேசியதாவது:- ஒடுக்கப்பட் மக்களின் கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கும் கட்சியல்ல விடுதலை சிறுத்தைகள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுகின்றவர் திருமாவளவன். இந்தியா முழுவதும் மது அருந்தும் ஆண்களின் சதவீதம் 22 சதவீதமாக இருக்கையில், தமிழ்நாட்டில் 32 சதவீதமாக உள்ளது என்றார்.

    Next Story
    ×