என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
19 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
- 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
- 10 பேர் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை:
1999-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆனந்த குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐ.ஜி. பதவியில் இருந்து கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜெயஸ்ரீ (2004 பிரிவு), சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெண்மதி (2009 பிரிவு), அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாகூர், மகேஷ்குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, ராமர் (2010 பிரிவு) ஆகிய 10 பேரும் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருநாவுக்கரசு முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்தார்.